இன்னா செய்யாமை

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.   (௩௱௰௫ - 315) 

பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமே போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன் தான் ஏதும் உளதாகுமோ?  (௩௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.  (௩௱௰௫)
— மு. வரதராசன்


அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?  (௩௱௰௫)
— சாலமன் பாப்பையா


பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை  (௩௱௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀯𑀺𑀷𑀸𑀷𑁆 𑀆𑀓𑀼𑀯 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄 𑀧𑀺𑀶𑀺𑀢𑀺𑀷𑁆𑀦𑁄𑀬𑁆
𑀢𑀦𑁆𑀦𑁄𑀬𑁆𑀧𑁄𑀮𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀓𑁆 𑀓𑀝𑁃 (𑁔𑁤𑁛𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai
— (Transliteration)


aṟiviṉāṉ ākuva tuṇṭō piṟitiṉnōy
tannōypōl pōṟṟāk kaṭai.
— (Transliteration)


What does a man gain from his wisdom If he pines not at others' pain as his own?

ஹிந்தி (हिन्दी)
माने नहिं पर दुःख को, यदि निज दुःख समान ।
तो होता क्या लाभ है, रखते तत्वज्ञान ॥ (३१५)


தெலுங்கு (తెలుగు)
ఆత్మ కష్టమట్లు నన్యుల కష్టాలు
తెలియ లేనివాని తేలివి తేలివె? (౩౧౫)


மலையாளம் (മലയാളം)
അന്യനനുഭവിക്കുന്ന ദുഃഖങ്ങൾ സ്വന്തമെന്നപോൽ ഭാവിക്കാൻ കഴിയാതുള്ളോർ നിശ്ചയം വിജ്ഞരല്ലകേൾ (൩൱൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬೇರೊಂದು ಜೀವಿಯ ನೋವನ್ನು ತನ್ನ ನೋದೆಂದು ಬಗೆದು, ಕಾಪಾಡದಿದ್ದರೆ, ತಾನು ಪಡೆದ ಅರಿವಿನಿಂದ ಪ್ರಯೋಜನವೇನು? (೩೧೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
परदु:खं स्वदु:खेन समं मत्वापि तो जन:।
परान्न त्रायते तस्य तत्वज्ञानेन किं फलम्?॥ (३१५)


சிங்களம் (සිංහල)
අනුන් දුක තම දුක - ලෙස නො සලකන කල්හි ලබන ලද දැනුමෙන්- කූමන පලයක් ලොවට වේවි ද ? (𑇣𑇳𑇪𑇥)

சீனம் (汉语)
倘人不視他人之傷痛如己身受, 因而深戒傷人, 聰明才智又何所用? (三百十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Apa-lah guna-nya kebijaksanaan kapada sa-saorang kalau dia tidak merasa saperti sakit-nya sendiri akan penderitaan orang lain, dan kerana itu tidak menahan diri-nya daripada melukai orang?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
타인의 고통을 자신의 고통처럼 생각하지 않는 자의 지식은 아무런 소용도 없다. (三百十五)

உருசிய (Русский)
Скажи, какой толк от твоих мудрствований, если тебя не уязвляет боль чужого человека, которую ты не воспринимаешь как собственную?

அரபு (العَرَبِيَّة)
كيف يفيد احد علمه وعقله إن لم يشعر بمصيبة غيره كمصيبة نفسه والذى يشعر كذلك بمبلغ من اسابة الشر إلى غيره (٣١٥)


பிரெஞ்சு (Français)
Quelle est l’utilité de l’intelligence, si on ne considère pas le malheur d’autrui comme le sien et si on le répare pas?

ஜெர்மன் (Deutsch)
Fühlt jemand die Schmerzen anderer nicht wi seine eigenen -wie nutzlos isr seine Weisheit!

சுவீடிய (Svenska)
Vartill nyttar all världens visdom om man icke skyddar sin nästa mot nöd såsom vore det ens egen nöd.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Scientia tua quid efficitur, si alienum malum tamquam tuum non curas? (CCCXV)

போலிய (Polski)
Na cóż zda ci się rozum, jeżeli zna miłość Tylko do twej wyłącznie osoby?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22