இன்னா செய்யாமை

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.   (௩௱௰௪ - 314) 

துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்  (௩௱௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.  (௩௱௰௪)
— மு. வரதராசன்


நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.  (௩௱௰௪)
— சாலமன் பாப்பையா


நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்  (௩௱௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁆𑀷𑀸𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀭𑁃 𑀑𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀯𑀭𑁆𑀦𑀸𑀡
𑀦𑀷𑁆𑀷𑀬𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁔𑁤𑁛𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital
— (Transliteration)


iṉṉācey tārai oṟuttal avarnāṇa
naṉṉayañ ceytu viṭal.
— (Transliteration)


Punish an evil-doer By shaming him with a good deed.

ஹிந்தி (हिन्दी)
बुरा किया तो कर भला, बुरा भला फिर भूल ।
पानी पानी हो रहा, बस उसको यह शूल ॥ (३१४)


தெலுங்கு (తెలుగు)
చెడ్డ జేసెనేని సిగ్గు పడగవాడు
మంచి చేయుటగును మహిత శిక్ష. (౩౧౪)


மலையாளம் (മലയാളം)
ദ്രോഹം ചെയ്തവർ ലജ്ജിക്കത്തക്കനന്മകൾ ചെയ്യണം ഗുണമോ ദോഷമോ- ചെയ്ത കർമ്മങ്ങൾ വിസ്മരിക്കണം (൩൱൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತನಗೆ ಕೇಡು ಬಗೆದವರನ್ನು ದಂಡಿಸುವುದು ಹೇಗೆಂದರೆ, ಅವರು ನಾಚವರೀತಿಯಲ್ಲಿ, ಅವರಿಗೆ ಒಳ್ಳೆಯದನ್ನು ಮಾಡಿ, ಅವರು ಮಾಡಿದ ಅಪಕಾರವನ್ನು ಮರೆತು ಬಿಡುವುದು. (೩೧೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
उपकृत्यापि श्त्रूणा मुपकारापकारयो:।
विस्मृति: साधुभिर्दत्तं दण्डनं स्याद्विरोधिषु॥ (३१४)


சிங்களம் (සිංහල)
හිංසා කළවුනට - දියයුතූ හොඳම දඩුවම ලජ්ජා වන ලෙසට - වඩ වඩා හොඳ දෙය කිරිමයි (𑇣𑇳𑇪𑇤)

சீனம் (汉语)
高尚之士, 以德報怨, 使仇敵慚愧於心. (三百十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Bagaimana-kah sa-saorang menghukum mereka yang telah melukai- nya? Biar-lah ia membalas baik kapada-nya supaya yang melukakan itu akan berasa malu di-dalam hati-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
악당을 처벌하는 가장 좋은 방법은 가해 행위를 잊고 그 악당에게 선행을 하는 것이다. (三百十四)

உருசிய (Русский)
Если ты хочешь действительно отомстить людям, причинившим тебе зло, причини им добро и тем самым устыди их.

அரபு (العَرَبِيَّة)
أحسن النـقمة مع العدوالذى أصاب أحدا بسوء أن يجعله خجولا باظهار الرأفة والرحمة له ردا لما عامل معه بالشر (٣١٤)


பிரெஞ்சு (Français)
Confondre ceux qui vous ont fait du mal, en leur faisant du bien, c’est les punir.

ஜெர்மன் (Deutsch)
Fügt dir jemand Schaden zu -bestrafe ihn, indem du ihn durch Gutestun beschämst.

சுவீடிய (Svenska)
Den som har gjort dig något ont skall du vedergälla genom att till hans blygsel göra något gott i gengäld.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Damnum (tibi) inferentes poena afficies, si beneficia in eos contuleris, ut pudore afficiantur. (CCCXIV)

போலிய (Polski)
Czy nie starczy ci klęska i wstyd fanfarona, Kiedy jemu się noga powinie?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22