கள்ளாமை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.   (௨௱௮௰௩ - 283) 

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும்  (௨௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.  (௨௱௮௰௩)
— மு. வரதராசன்


திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.  (௨௱௮௰௩)
— சாலமன் பாப்பையா


கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்  (௨௱௮௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀆𑀓𑀺𑀬 𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀴𑀯𑀺𑀶𑀦𑁆𑀢𑀼
𑀆𑀯𑀢𑀼 𑀧𑁄𑀮𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁓𑁤𑁢𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum
— (Transliteration)


kaḷaviṉāl ākiya ākkam aḷaviṟantu
āvatu pōlak keṭum.
— (Transliteration)


Stolen wealth may seem to swell But in the end will burst.

ஹிந்தி (हिन्दी)
चोरी-कृत धन में रहे, बढ़्ने का आभास ।
पर उसका सीमारहित, होता ही है नाश ॥ (२८३)


தெலுங்கு (తెలుగు)
వెరిగినట్లు వెరిగి వెరిగిన దంతయుఁ
తరిగిపోవు దొంగతనపు ధనము. (౨౮౩)


மலையாளம் (മലയാളം)
കവർച്ച ചെയ്ത സമ്പാദ്യം വളരും പോലെതോന്നിടും കാലം ചെറ്റുകഴിഞ്ഞാലെല്ലാം നാശമടഞ്ഞിടും (൨൱൮൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಳವಿನಿಂದ ಉಂಟಾದ ಸಂಪತ್ತು, ಬೆಳೆಯುವಂತೆ ತೋರಿ ಕೊನೆಗೆ ಸಂಪೂರ್ಣ ನಾಶವಾಗುವುದು. (೨೮೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
चौर्यदुपार्जितं वित्तं प्रवृद्धमिव पश्‍यताम्।
भूत्वा न्यायार्जितैर्वित्तैस्सह पश्चाद्विनश्‍यति॥ (२८३)


சிங்களம் (සිංහල)
සොරසිතින් උපයන- දන කඳ අති මහත් වුව වැඩි දියුණු වූ සේ- පෙනී, නොපෙනී, වහා වැනසේ (𑇢𑇳𑇱𑇣)

சீனம் (汉语)
欺心而來之財物, 縱使人富有於一時, 其罪則在永久. (二百八十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Harta kekayaan yang di-kumpulkan dengan menipu kelihatan ma‘- mor: tetapi ia nanti akan terkutok buat sa-lama2-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
강탈한 부가 증대되는 듯 보이지만 실제로는 무한한 파멸을 초래한다. (二百八十三)

உருசிய (Русский)
Богатство, обретенное обманом, обречено на погибель, хотя с виду такой путь может казаться необычайно перспективным

அரபு (العَرَبِيَّة)
المال الذى يكسبه احد بالخذاع والمكر مع أنه يكثر ويزداد ولكنه سيغنى عن قريب (٢٨٣)


பிரெஞ்சு (Français)
La fortune acquise par le vol semble prospérer, mais elle dépasse les limites et périt.

ஜெர்மன் (Deutsch)
Scheint es auch unhegrcnzt zu wachsen, geht das betrügerisch Erworbene doch gleich zugrunde.

சுவீடிய (Svenska)
Om ock den rikedom som har vunnits genom stöld ser ut att växa utan gräns, så kommer den att gå tillspillo.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Bonum fraude partum, dum videtur augeri, modum execdendo deatruitur. (CCLXXXIII)

போலிய (Polski)
Žle nabyty dobrobyt, chociażby i znaczny, Kiedyś się niespodzianie rozleci.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22