கூடாவொழுக்கம்

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.   (௨௱௭௰௭ - 277) 

புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர்  (௨௱௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.  (௨௱௭௰௭)
— மு. வரதராசன்


குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.  (௨௱௭௰௭)
— சாலமன் பாப்பையா


வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு  (௨௱௭௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀶𑀗𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀺 𑀓𑀡𑁆𑀝𑀷𑁃𑀬 𑀭𑁂𑀷𑀼𑀫𑁆 𑀅𑀓𑀗𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀺
𑀫𑀼𑀓𑁆𑀓𑀺𑀶𑁆 𑀓𑀭𑀺𑀬𑀸𑀭𑁆 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁓𑁤𑁡𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Purangundri Kantanaiya Renum Akangundri
Mukkir Kariyaar Utaiththu
— (Transliteration)


puṟaṅkuṉṟi kaṇṭaṉaiya rēṉum akaṅkuṉṟi
mukkiṟ kariyār uṭaittu.
— (Transliteration)


Like the kunri - red to view but black on top Are many, ochre-robed but black within.

ஹிந்தி (हिन्दी)
बाहर से है लालिमा, हैं घुंघची समान ।
उसका काला अग्र सम, अन्दर है अज्ञान ॥ (२७७)


தெலுங்கு (తెలుగు)
ఎఱ్ఱని గురిగింజ కెటులుండు నల్లుపట్లు
మంచివారి యందు మసి యొకింత. (౨౭౭)


மலையாளம் (മലയാളം)
കുന്നിക്കുരുവിനെപ്പോലെ പുറം ചെന്നിറമെങ്കിലും കുന്നിയെപ്പോൽ കറുപ്പുള്ളിലുള്ളമാനുഷരെത്രയോ! (൨൱൭൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಹೊರಗೆ ತೋರಿಕೆಗೆ ಗುಲಗುಂಜಿ ಮಣಿಯಂತೆ ಕೆಂಪಾಗಿ ಕಂಡರೂ ಮನಸ್ಸಿನೊಳಗೆ ಆ ಮಣಿಯ ತಾದಿಯಲ್ಲಿರುವ ಕಪ್ಪಿನಂತೆ ತೋರಿಕೊಳ್ಳುವವರೂ ಈ ಲೋಕದಲ್ಲಿ ಇದ್ದಾರೆ. (೨೭೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
बहिर्गुञ्जासमाकारा: बहवो रक्तवासस:।
अज्ञान मन्तरेतेर्षां गुञाग्रे श्‍यामता यथा॥ (२७७)


சிங்களம் (සිංහල)
පිටතින් එම පෙනුම - ගැනුනත් පැහැය ඔලිඳක ඇතූළත ඔළිඳ ඇස- මෙන් කළුව ඇති අයත් ඇත ලොව (𑇢𑇳𑇰𑇧)

சீனம் (汉语)
「坤銳」之籽, 半白半黑, 有人如之, 其面善, 其心惡. (二百七十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Biji kunri puteh warna-nya di-sabelah, tetapi di-bahagian lain-nya hitam pula: memang ada orang yang saperti itu: di-luar-nya dia ke- lihatan murni, tetapi di-dalam-nya segala2-nya jijik.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
외관상으로는 산딸기처럼 빛나지만 내적으로는 그것의 냄새처럼 더러운 자들이 있다. (二百七十七)

உருசிய (Русский)
Па земле ходят люди, которые с виду прекрасны, как орешек кундри, но в душе они темны, как оболочка этого ореха

அரபு (العَرَبِيَّة)
بعضها سوداء واكثرها قرمزى اللون (٢٧٧)


பிரெஞ்சு (Français)
Le monde a des hommes qui, ont un brillant dehors, comme la graine à reglisse, mais dont le cœur est noir comme le bec de la graine à reglisse.

ஜெர்மன் (Deutsch)
Die Welr kenni Leute, die nach außen rot wie die tvilde Lakrirzenbeere leuchten, aber innen so schwarz sind wie ihr Blitzen.

சுவீடிய (Svenska)
Även om de ser ut som Kunri-kärnan på den fina ytan är deras inre svart liksom Kunri-kärnans topp.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
(mundus) tenet, qui, quamvis speciem externam cunri seminis prae se ferant, indole interna apice ejus sint nigriores. (CCLXXVII)

போலிய (Polski)
Wielu ludzi jak Kunri* są biali na twarzy, A zaś czarni jak smoła od spoda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குன்றிமணியும் போலித் துறவியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

குன்றிமணி சிவப்பு நிறமாக, மினுமினுப்பாக இருக்கும். ஆனால் அதன் மூக்கு மட்டும் கறுத்திருக்கும். சிவப்பில் கறுப்பு பளிச்சென்று தெரியும்.

அதுபோல, உடல் முழுவதும் தவக்கோலமாக இருந்தாலும், உள்ளம் இருண்டு வஞ்சகம் நிறைந்தவர்களாகப் போலித்துறவிகள் இருக்கிறார்கள். அவர்கள் கொடியவர்கள்.

அத்தகையவர்கள் வெளித்தோற்றத்தில் உத்தமர்களைப் போலவும், உண்மை பேசுபவர்கள் போலவும், தவசீலர்கள் போலவும் நடிப்பார்கள்.

அந்தப் பொய் வேடத்தைக் கண்டு, ஏமாருபவர்கள் பலர். வேடதாரிகளிந் வஞ்சத்தை, உடல் தோற்றத்தால் அறிய முடியாது. ஒழுக்கத்தின் அளவில்தான் காணமுடியும்.


புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22