கூடாவொழுக்கம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.   (௨௱௭௰௩ - 273) 

மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு, புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்  (௨௱௭௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.  (௨௱௭௰௩)
— மு. வரதராசன்


கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.  (௨௱௭௰௩)
— சாலமன் பாப்பையா


மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்  (௨௱௭௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀮𑀺𑀬𑀺𑀮𑁆 𑀦𑀺𑀮𑁃𑀫𑁃𑀬𑀸𑀷𑁆 𑀯𑀮𑁆𑀮𑀼𑀭𑀼𑀯𑀫𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀫𑁆
𑀧𑀼𑀮𑀺𑀬𑀺𑀷𑁆𑀢𑁄𑀮𑁆 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀼𑀫𑁂𑀬𑁆𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁓𑁤𑁡𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Valiyil Nilaimaiyaan Valluruvam Petram
Puliyindhol Porththumeyn Thatru
— (Transliteration)


valiyil nilaimaiyāṉ valluruvam peṟṟam
puliyiṉtōl pōrttumēyn taṟṟu.
— (Transliteration)


A weakling posing a giant form Is an ox grazing in a tiger's skin.

ஹிந்தி (हिन्दी)
महा साधु का वेष धर, दमन-शक्ति नहिं, हाय ।
व्याघ्र-चर्म आढे हुए, खेत चरे ज्यों गाय ॥ (२७३)


தெலுங்கு (తెలుగు)
పొలము మేయునట్లె పులితోలుతో నావు
తిరిపమునకు జేయు తీవ్ర తపము. (౨౭౩)


மலையாளம் (മലയാളം)
സംയമനം സാധിക്കാത്ത മുനിതൻ വേഷഭൂഷണം പശുക്കൾ പുലിവേഷത്തിൽ കൃഷിതിന്നുന്ന പോലെയാം (൨൱൭൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನಸ್ಸನ್ನು ಇಂದ್ರಿಯಗಳ ಆಸೆಗಳಿಂದ ಅಡಗಿಸುವ ಬಲವಿಲ್ಲದವನು ಕೈಗೊಂಡ ಕಠಿಣ ತಪಸ್ಸು, ಹಸು ಚರ್ಮವನ್ನು ಹೊದ್ದುಕೊಂಡು ಹುಲ್ಲು ಮೇಯವಂತೆ, ಅಭಾಸಸಕರವಾದದ್ದು. (೨೭೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
मनसो निग्रहं हित्वा मुनिवेषस्य वर्तनम्।
वुआघ्रचर्मवृत्तो घेनु: सस्यं चरति चेत्, तथा॥ (२७३)


சிங்களம் (සිංහල)
තවුස් දම් නොමැතිව - තවුසන් බලය ඇඟවුම් දිවිසම පෙරව ගත් - එළදෙනක් තණ කෑම වැනිවේ (𑇢𑇳𑇰𑇣)

சீனம் (汉语)
心不正而示人以道貌, 猶如牛蒙虎皮也. (二百七十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Amati-lah manusia yang maseh tidak dapat menguasai diri-nya tetapi menunjok2 pula diri-nya sa-bagai sa-orang suchi: dia saperti lembu yang merumput merata dengan berkulitkan harimau.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
내적인 힘이 없는 자의 성스러운 모습은 호랑이 거죽으로 만든 옷을 입힌 목초지의 소와 같다. (二百七十三)

உருசிய (Русский)
Если человек не может обуздать себя, то напускает на себя важный вид лицемерного ханжи, он подобен корове, влезшей в тигровую шкуру и для вида щиплющей траву

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يتظاهر بقوته ولا يملكها حقيقة هو كمثل البقرة التى ترعى فى الصحراء لا بسة جلد اسد (٢٧٣)


பிரெஞ்சு (Français)
Sans avoir le pouvoir de maitriser sa volonté, celui qui adopte l’apparence des pénitences (qui ont ce pouvoir) ressemble à la vache qui broute les cultures, recouverte d’une peau de tigre (pour n’être pas chassée par les cultivateurs).

ஜெர்மன் (Deutsch)
Wer in Wirklichkeit unfähig ist, seine Sinne zu beherrschen, aber asketische Macht vorgibt, der ist wie eine Kuh, die im Fell eines Tigers heimlich grast.

சுவீடிய (Svenska)
Likt en ko som betar gräs iförd tigerhamn är den kraftlöse iförd den starkes skepnad.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Species virium in eo, cujus couditio est, ut vires ei deficiant, perinde se habet ac bos, quae pelle tigridis cooperta pascitur (CCLXXIII)

போலிய (Polski)
Niby – zacność podstępna to skóra tygrysa, Którą bawół na postrach przywdziewa,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொய்ப் புலியும் போலி வேடதாரியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பசியினால் புல்லைத் தின்ன நினைத்த பசு, புலித் தோலைப் போர்த்துக் கொண்டு, ஒரு தோட்டத்தினுள்புகுந்து புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.

தோட்டத்தின் காவல்காரன் பார்த்தான். புலி புல்லைத் தின்னாதே என்று சந்தேகப்பட்டான். ஆனால் அதை விரட்டுவதற்கு அவன் அஞ்சினான்.

பசுவுக்கு புல் கிடைத்தது. ஆனாலும், தன் பொய் வேடம் தெரிந்து அடிபடுவோமோ என்று உள்ளூற அச்சம் உண்டாயிற்று.

அதுபோல, உழைத்து உண்ண விரும்பாத சோம்பேறி, பொய்யாக தவ வேடம் பூண்டு சுகபோகங்களை அனுபவிக்க ஆசைப்பட்டுத் திரிகிறான்.

பொதுமக்கள் அவனை நம்பினாலும், ஒருகால் சந்தேகம் எழுகின்றது. ஏனென்றால், அவன் தீமொழி கூறிவிடுவானோ என்ற பயமும் தோன்றுகிறது.

போலி வேடதாரிக்கும் உள்ளூற அச்சம். எங்கே தன் பொய் வேடத்தை மக்கள் அறிந்து உதைத்து விரட்டி விடுவார்களோ என்று பயத்தோடு திரிகிறான்.


வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22