தவம்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.   (௨௱௬௰௭ - 267) 

சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்  (௨௱௬௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்  (௨௱௬௰௭)
— மு. வரதராசன்


நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.  (௨௱௬௰௭)
— சாலமன் பாப்பையா


தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்  (௨௱௬௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀼𑀝𑀘𑁆𑀘𑀼𑀝𑀭𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀧𑁄𑀮𑁆 𑀑𑁆𑀴𑀺𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 𑀢𑀼𑀷𑁆𑀧𑀜𑁆
𑀘𑀼𑀝𑀘𑁆𑀘𑀼𑀝 𑀦𑁄𑀶𑁆𑀓𑀺𑀶𑁆 𑀧𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁓𑁤𑁠𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sutachchutarum Ponpol Olivitum Thunpanjjch
Utachchuta Norkir Pavarkku
— (Transliteration)


cuṭaccuṭarum poṉpōl oḷiviṭum tuṉpañ
cuṭaccuṭa nōṟkiṟ pavarkku.
— (Transliteration)


As the intense fire makes gold shine, So does the burning austerities relieve pain.

ஹிந்தி (हिन्दी)
तप तप कर ज्यों स्वर्ण की, होती निर्मल कान्ति ।
तपन ताप से ही तपी, चमक उठें उस भाँति ॥ (२६७)


தெலுங்கு (తెలుగు)
పుటముఁ బెట్ట బెట్టఁ బొల్పొందు బంగారు
బాధ పడను పడను బోధపడును. (౨౬౭)


மலையாளம் (മലയാളം)
നീറിനീറിക്കറനീങ്ങിത്തിളങ്ങും സ്വർണ്ണമെന്നപോൽ തപശ്ചര്യയിൽ പാപം പോയ് ജ്ഞാനമുള്ളിൽ തിളങ്ങിടും (൨൱൬൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಪುಟವಿಟ್ಟಂತೆಲ್ಲ ಚಿನ್ನವು ಹೆಚ್ಚು ಹೊಳೆಯುವುದು; ಅದರಂತೆ ತಪಸ್ಸಿಗಳು ಹೆಚ್ಚು ಕಷ್ಟಕ್ಕೀಡಾದಂತೆಲ್ಲ ಆತ್ಮಬಲ ವರ್ಧಿಸುತ್ತದೆ (೨೬೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
असकृद्वह्निसन्तप्तं सुवर्णे सुष्ठु राजते।
तप: क्लेशितकायस्य ज्ञानं सम्यक् प्रकाशते॥ (२६७)


சிங்களம் (සිංහල)
රත් කරන කල්හි - දිලෙන රන් මෙන් බැබළෙති දුක් විඳ විඳ තවුස් - දම්හි නියැලී සිටින තවුසෝ (𑇢𑇳𑇯𑇧)

சீனம் (汉语)
黃金經火鍊而愈光澤. 苦行者經痛苦而愈成熟. (二百六十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lebeh ganas api yang menchairkan-nya, sa-makin berkilau2an-lah chahaya emas itu jadi-nya: demikian-lah sa-makin perih derita yang di-alami oleh pengamal pertapaan sa-makin murni-lah sinaran jiwa- nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
불은 금을 제련해서 더 빛나게 하고, 참회의 고통은 수도자를 더 정화시킨다. (二百六十七)

உருசிய (Русский)
Как золото с увеличением силы огня обретает первозданную чистоту и блеск, точно так и лишения с возрастанием их суровости все более закаляют человека для перенесения боли и мучений

அரபு (العَرَبِيَّة)
كما أن الذهب يبرز أكثر خالصا بازدياد شعلة النار فكذلك المرتاضون يصيرون خالصين مخلصين باحتمال الشدائد والمصيبات (٢٦٧)


பிரெஞ்சு (Français)
Plus la flamme du feu est violente, plus brillant devient l’éclat de l’or qui y est fondu. De même, plus aigues sont les souffrances causées par les austérités, plus brillante devient la sagesse des pénitents.

ஜெர்மன் (Deutsch)
Erhitzt leuchtet das Gold stärker - so ist es mit dei Erkenninis der Büßer durth die Kraft ihrer fortwährenden Buße.

சுவீடிய (Svenska)
Ju hetare det glöder, dess renare luttras guldet. Så luttras även deras själ som har uthärdat askesens plåga.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ut, igne ardcente, in aurum: ita, afflictione ardente, in poenitentes lux se effundit. (CCLXVII)

போலிய (Polski)
Złoto świeci najmocniej, gdy wyjdzie z płomieni. Człowiek płaci za blask swój cierpieniem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தங்கமும் தவமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அழுக்கு, மாசு முதலியவற்றால் ஒளி மங்கிய தங்கத்தை நெருப்பில் இட்டு காய்ச்ச அழுக்கு நீங்கி, மெழுகு ஏறும். ஒளிவீசும் காண்பவருக்குக் களிப்பு ஊட்டும்.

அதுபோல, எத்தகைய துன்பங்கள், எத்தனை இடையூறுகள், அடுத்து அடுத்து வந்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், தவத்தை மேற்கொள்பவருக்கு, தவ வலிமை அதிகரித்து, ஞான ஒளி உண்டாகும். பெருமை ஏற்படும்.

துன்பத்துக்கு அஞ்சாதவரே தவம் செய்யும் ஆற்றல் உடையவர்.

(தவம் என்பது தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு எவருக்கும் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல், ஐந்து ஆசைகளை அடக்கி உறுதியுடன் நடப்பதே ஆகும். அது மேலான வாழ்வு நெறி என்பார்கள்.)


சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22