ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.   (௨௱௨௰௮ - 228) 

தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?  (௨௱௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.  (௨௱௨௰௮)
— மு. வரதராசன்


இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?  (௨௱௨௰௮)
— சாலமன் பாப்பையா


ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?  (௨௱௨௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀈𑀢𑁆𑀢𑀼𑀯𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀅𑀶𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀢𑀸𑀫𑀼𑀝𑁃𑀫𑁃
𑀯𑁃𑀢𑁆𑀢𑀺𑀵𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀷𑁆𑀓 𑀡𑀯𑀭𑁆 (𑁓𑁤𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai
Vaiththizhakkum Vanka Navar
— (Transliteration)


īttuvakkum iṉpam aṟiyārkol tāmuṭaimai
vaittiḻakkum vaṉka ṇavar.
— (Transliteration)


Unaware of the joys of giving, The hard-hearted waste their wealth hoarding it.

ஹிந்தி (हिन्दी)
धन-संग्रह कर खो रहा, जो निर्दय धनवान ।
दे कर होते हर्ष का, क्या उसको नहिं ज्ञान ॥ (२२८)


தெலுங்கு (తెలుగు)
లేనివాని కిడక తనకు తానె తినుట
వరమ సీచమగును పస్తుకన్న. (౨౨౮)


மலையாளம் (മലയാളം)
ഭിക്ഷ നൽകാൻ കഴിവറ്റ സജ്ജനത്തിൻറെ ചിന്തയിൽ വേദനാജന്യമാം മൃത്യു സന്തോഷകരമായിടും (൨൱൨൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತಾವು ಗಳಿಸಿರುವ ಸೊತ್ತನ್ನು ಬಚ್ಚಿಟ್ಟು ಕಳೆಯುವ ಕಲ್ಲು ಮನಸ್ಸಿನವರು ಕೊಟ್ಟು ನಲಿಯುವ ಸುಖವನ್ನು ಅರಿಯಲಾರರೆ? (೨೨೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अभुक्तं स्वेन चान्येभ्योऽप्यदत्तं यस्य वै धनम्।
क्षीयते कि न जानाति स सौख्यं दानमूलकम्?॥ (२२८)


சிங்களம் (සිංහල)
තම දනය සඟවා - නැති බුං කරන නපුරෝ දීමෙන් ලබත හැකි- සතූට සම්පත නොම දනිත් දෝ (𑇢𑇳𑇫𑇨)

சீனம் (汉语)
無情之富人深藏其廢鐡, 蓋不知施捨之樂也. (二百二十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang yang berhati keras yang membinasakan harta kekayaan-nya dengan menyimpan-nya, tiada pcrnah-kah mereka merasakan ni‘- mat menyedekah kapada orang lain?
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
부를 축적하고 손실하는 사람은 자선으로 가난한 사람을 기쁘게 하는 즐거움을 모른다.  (二百二十八)

உருசிய (Русский)
Разве знает радость от щедрого угощения нищих тот человек,,оторый прячет свое богатство, словно закапывая его в землю?

அரபு (العَرَبِيَّة)
الثرى القاسى يخفى ثروته من الناس وذلك بسبب أنه لا يعرف بهجة الإنفاق (٢٢٨)


பிரெஞ்சு (Français)
Ce sont ceux qui sont dépourvus de la grâce qui thésaurisent et perdent ensuite leur fortune. Ils ne connaissent donc pas le bonheur éprouvé par ceux qui donnent ?

ஜெர்மன் (Deutsch)
Jene Hartherzigen, die ihren Reichtum zurückhalten und deshalb vetlieren - kennen sie die Freude nicht, den Armen zu geben?

சுவீடிய (Svenska)
Kan den hårdhjärtade som snålt sparar och därmed förlorar sin egendom väl någonsin uppleva glädjen av att glädja andra med sina gåvor?
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Voluptatem cum gaudio dandi non norunt , qui oculo duro bonum suum servantes amittunt, (CCXXVIII)

போலிய (Polski)
Jakżeż biedni są skąpcy, gdy kryją swój metal, A nie znają radości dawania.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22