தவத்தில் ஆழ்ந்து, தவ வலிமை பெற்றவர் தமக்கு உண்டாகக்கூடிய பசியை அடக்கி, பொறுத்துக்கொள்ள முடியும். அவரால் தம்மை மட்டுமே காத்துக்கொள்ள முடியுமே தவிர, மற்றவர்களின் பசியை போக்கமுடியாது.
ஆனால் பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளித்து, அவர்களுடைய பசியைப் போக்குவது ஈகைகளுள் சிறந்தது.
நானும் பசியால் துன்புறாமல் மற்றவர்களும் பசியால் வருந்தாமல், உணவு அளித்து அவர்களை எவர் வாழ வைக்கிறாரோ அவர் தவ வலிமை உடையவரைக் காட்டிலும் மேலானவர்.
உணவு அளித்து பசிப்பிணியை போக்குபவரே முதன்மையானவர்- மேலானவர். அவருக்கு அடுத்தவர் தான் தவ வலிமை உடையவர்.