புறங்கூறாமை

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.   (௱௮௰௨ - 182) 

அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்  (௱௮௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.  (௱௮௰௨)
— மு. வரதராசன்


அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.  (௱௮௰௨)
— சாலமன் பாப்பையா


ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது  (௱௮௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀷𑀵𑀻𑀇 𑀅𑀮𑁆𑀮𑀯𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀮𑀺𑀷𑁆 𑀢𑀻𑀢𑁂
𑀧𑀼𑀶𑀷𑀵𑀻𑀇𑀧𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀼 𑀦𑀓𑁃 (𑁤𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aranazheei Allavai Seydhalin Theedhe
Puranazheeip Poiththu Nakai
— (Transliteration)


aṟaṉaḻī'i allavai ceytaliṉ tītē
puṟaṉaḻī'ip poyttu nakai.
— (Transliteration)


Viler than violating virtue for committing vile, Is to smile before and vilify behind.

ஹிந்தி (हिन्दी)
नास्तिवाद कर धर्म प्रति, करता पाप अखण्ड ।
उससे बदतर पिशुनता, सम्मुख हँस पाखण्ड ॥ (१८२)


தெலுங்கு (తెలుగు)
మంచి బలికి యెదుట మరుగున నిండించు
క్రూర కర్ముఁగీడు గూడియుండు (౧౮౨)


மலையாளம் (മലയാളം)
കുറ്റം ചോല്ലലഭാവത്തിൽ മുഖം നോക്കി പ്പുകഴ്ത്തലും ധർമ്മത്തെത്താഴ്ത്തി പാപങ്ങൾ ചെയ്‍വതേക്കാൾ നികൃഷ്ടമാം (൱൮൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಧರ್ಮವನ್ನು ಹಳಿದು ಪಾಪ ಕೃತ್ಯಗಳನ್ನು ಎಸಗುವುದಕ್ಕಿಂತ ಕೆಟ್ಟದು, ಹಿಂದಿನಿಂದ ಹಳಿದು ಎದುರಿಗೆ ತೋರಿಸುವ ಕಪಟ ನಗೆ. (೧೮೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
परोक्षे दूषयित्वा या प्रत्यक्षे कपटस्तुति: ।
धर्महानेरधर्मस्य करणात् पापदैव सा ॥ (१८२)


சிங்களம் (සිංහල)
මුහුණට සිනාවත්- නැති තැන අගූණ කීමත් අදහම් කිරිමට - වඩා නපුරුයි දහම් වනසා (𑇳𑇱𑇢)

சீனம் (汉语)
違善作惡乃屬過失, 但佯笑於人之前而識謗於人之後則更屬卑鄙. (一百八十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Burok-lah kalau berpaling dari yang baik dan melakukan sa-suatu yang jahat: tetapi lebeh burok-lah lagi memberi senyuman di-hadap- an dan menchela di-belakang.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
누군가의 존재를 찬양한 후 험담하는 것은 악행을 하고 미덕을 비난하는 것보다 더 나쁘다.  (百八十二)

உருசிய (Русский)
Лживая улыбка в лицо и злословие за спиной другого намного хуже потери благородства и свершения гнусных деяний

அரபு (العَرَبِيَّة)
إن ترتكب جريمة غيبة ضد أحد يسعى هو بالتجسس عن عيوبك ويشهرها بين الناس (١٨٢)


பிரெஞ்சு (Français)
Il est certes mauvais de dire du mal de la vertu et même de commettre des péchés; il est pire de calomnier quelqu’un, en son absence et de lui témolgner une fausse joie, en sa présence.

ஜெர்மன் (Deutsch)
Hintenherum zu verleumden und vornhcrum schön zu tun ist sogar noch schlechter, als den dharma zu erniedrigen und adharma zu tun. 

சுவீடிய (Svenska)
Värre än att förakta all dygd och göra allt möjligt ont är det falska smil som döljer fräckt förtal.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Absentem perdere et (praesenti) ore mendaci arridere est pejus quam virtutem perdere et peccatum committere. (CLXXXII)

போலிய (Polski)
Czyż jest rzecz obrzydliwsza od niby uśmiechu, Który jeno parawan stanowi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22