அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.   (௱௬௰௧ - 161) 

தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்  (௱௬௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.  (௱௬௰௧)
— மு. வரதராசன்


உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.  (௱௬௰௧)
— சாலமன் பாப்பையா


மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்  (௱௬௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀸𑀶𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓 𑀑𑁆𑀭𑀼𑀯𑀷𑁆𑀢𑀷𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼
𑀅𑀵𑀼𑀓𑁆𑀓𑀸𑀶𑀼 𑀇𑀮𑀸𑀢 𑀇𑀬𑀮𑁆𑀧𑀼 (𑁤𑁠𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu
— (Transliteration)


oḻukkāṟāk koḷka oruvaṉtaṉ neñcattu
aḻukkāṟu ilāta iyalpu.
— (Transliteration)


Deem virtuous that heart of men Who by nature are not jealous.

ஹிந்தி (हिन्दी)
जलन- रहित निज मन रहे ऐसी उत्तम बान ।
अपनावें हर एक नर, धर्म आचरण मान ॥ (१६१)


தெலுங்கு (తెలుగు)
మంచివాడటంచు మహిమీదఁ బొగడొందు
క్రుళ్ళుబోతు తనము గూడకున్న (౧౬౧)


மலையாளம் (മലയാളം)
ഹീനമായ സ്വഭാവത്തിലേറെ നിന്ദ്യമസൂയയാം തദ്ദോഷം മനമേറാതെ കാത്തു സൂക്ഷിച്ചുകൊള്ളണം (൱൬൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಒಬ್ಬನ್ನು ತನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ಅಸೂಯೆ ಇಲ್ಲದೆ ಬಾಳುವ ಸ್ವಭಾವವನ್ನು ತನ್ನ ನಡತೆಯ ಮಾರ್ಗವಾಗಿ ಕೈಕೊಂಡು ಕಾಪಾಡಬೇಕು (೧೬೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
असूयाहीनचित्तेन सन्मागैंक प्रवर्तिना ।
अनसूया रक्षणीया सदाचारसमा सदा ॥ (१६१)


சிங்களம் (සිංහල)
තම සිත තූළ කිසිම- ඉසියක් නොමැති ගතියම් මනා පැවතූම ලෙස - ගතොත් එය වේ උසස් පැවතූම (𑇳𑇯𑇡)

சீனம் (汉语)
議戒貪嫉. 人不貪嫉卽是德行. (一百六十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Ketahui-lah bahawa hati-mu telah chondong ka-arah kebaikan bila kau sudah bebas dari seluroh rasa chemburu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
수양을 쌓는 생활 방식을 통해 시기하지 않는 마음의 본질을 소중히해야 한다. (百六十一)

உருசிய (Русский)
Каждый должен знать, что украшением добродетельного человека является отсутствие в его сердце малейшей зависти

அரபு (العَرَبِيَّة)
إعلم بأن قـلبك سيميل إلى الخير والـبر عند ما يكون خاليا من الحسد (١٦١)


பிரெஞ்சு (Français)
Que l’on considère l’absence de l’envie eomme le chemin de la moralité.

ஜெர்மன் (Deutsch)
Übe die Tugend, im Geist frei von Neid zu sein! 

சுவீடிய (Svenska)
Om någon i sitt hjärta har ett sinne fritt från avund så må det lända honom till ära och heder.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Cujus indoles est in pectore invidiam non habere, eum bonam sequi viam, quisque secum statuat. (CLXI)

போலிய (Polski)
Strzeż się brudnej zawiści. Należy ją w sobie Stłumić siłą rozumu i woli.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22