நிலம் எவ்வளவு ஆழமாக தோண்டினாலும், நிலத்தில் குழி வெட்டினாலும், வெட்டியவனைக் கீழே தள்ளாமல் தாங்கிக்கொண்டிருக்கிறது.
அதுபோல, தன்னை இகழ்ந்து பேசி, அவமதிப்போரை மன்னித்துப் பொறுத்துக்கொள்வது மிகச் சிறந்த குணணாகும்.
மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்கள் மேடைகளில் ஒலிக்கின்றன.
ஆனால், குத்து, வெட்டு, கொலை, அடிதடி, சச்சரவுகள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
பொறுமையோடு இருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்த்துகிறது இந்த குறள்.