பிறனில் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.   (௱௪௰௫ - 145) 

இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்  (௱௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்  (௱௪௰௫)
— மு. வரதராசன்


அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.  (௱௪௰௫)
— சாலமன் பாப்பையா


எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்  (௱௪௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀴𑀺𑀢𑁂𑁆𑀷 𑀇𑀮𑁆𑀮𑀺𑀶𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀼𑀫𑁂𑁆𑀜𑁆 𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑀺𑀴𑀺𑀬𑀸𑀢𑀼 𑀦𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀵𑀺 (𑁤𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi
— (Transliteration)


eḷiteṉa illiṟappāṉ eytumeñ ñāṉṟum
viḷiyātu niṟkum paḻi.
— (Transliteration)


Erring with another's wife may seem easy, But disgrace will be irredeemable for all time.

ஹிந்தி (हिन्दी)
पर-पत्नी-रत जो हुआ, सुलभ समझ निश्शंक ।
लगे रहे चिर काल तक, उसपर अमिट कलंक ॥ (१४५)


தெலுங்கு (తెలుగు)
పరసతి సుఖమబ్బు పని తేలికేయైన
తిరరాని నింద జేరు నతని (౧౪౫)


மலையாளம் (മലയാളം)
സാരമാക്കാതെയന്യൻറെ പത്നിയോടെ രമിപ്പവൻ അടയും നിന്ദ്യതയോർത്താൽ മരണാന്തം നിലപ്പതാം (൱൪൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸುಲಭವಾಗಿ ಸಿಕ್ಕಿದಳೆಂದು ಪರಸತಿಯನ್ನು ಕೂಡುವವನು, ಯಾವಾಗಲೂ ಅಳಿಯದೆ ಉಳಿವ ನಿಂದೆಗೆ ಗುರಿಯಾಗುತ್ತಾನೆ. (೧೪೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सर्वसाधारणं मत्वा सङ्‍गत: परवल्लभाम् ।
अपवादं स्थिरं धत्ते गर्हितं तत्कुलं भवेत् ॥ (१४५)


சிங்களம் (සිංහල)
පහසු යැ යි සලකා- පරඹුන් වෙතට යන්නා නිගා නින්දාවන්- ලබයි නොමැකෙන පරිදි දිවිහිමි (𑇳𑇭𑇥)

சீனம் (汉语)
亂人妻室縦使易易, 亦招致終身之惡名. (一百四十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah orang yang bergayut kapada isteri tetangga-nya kerana si- isteri itu mudah di-perdaya: nama-nya temoda sa-lama2-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
타인의 아내를 경솔히 탐낼 수 있다. 그러나 그 수치는 영원히 남으리라. (百四十五)

உருசிய (Русский)
Несмываемым позором покроет себя человек, который оскверняет честь чужой жены, считая это пустяком

அரபு (العَرَبِيَّة)
اللابدى (١٤٥)


பிரெஞ்சு (Français)
Celui qui fréquente le femme du prochain parce qu’il en trouve l’accès facile, se rend coupable d’une faute irrémissible.

ஜெர்மன் (Deutsch)
Wer schamlos zu eines anderen Frau gehr, erfahrt untilgbare Schande.

சுவீடிய (Svenska)
Den som tänker: ”Det är en bagatell”, när han tränger in i andras hem drar på sig en skuld som aldrig plånas ut. 
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Qui dlicens: "leve est", in (alienam) domum irrumpit, ignominiam referet in aeternum non perituram. (CXLV)

போலிய (Polski)
Gdyś się niecnie porwał na cześć gospodarza, Gdyś na jego małżonkę nastawał,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22