நிலத்தில் ஊன்ற படும் விதை, கொஞ்சம் கொஞ்சமாக முளைத்து செடியாகி பயன் தரும்.
அதுபோல, நல்ல நடத்தை - நல்ல ஒழுக்கத்தோடு நடப்பவர் இன்பவாழ்வு வாழ்வார். போகப்போக அத்தகையவர்களுக்கு புகழ், பெருமை, நன்மை முதலியன கிடைக்கும்.
கெட்ட நடத்தை - தீய ஒழுக்கம் உள்ளவருக்கு உடனேயே துன்பம் உண்டாகும். ஆயில் வரையில் துன்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். கெட்ட நடத்தை மாறினால், துன்பமும் உண்டாகாது.