ஒருவனுடைய உடலில் தீயினால் சுட்ட புண் ஆறிப்போகும். எனினும், தழும்பு மட்டும் இருக்கும். ஆனால், உயிர் இருக்கும் வரையிலும் உறுத்திக் கொண்டே இருப்பது ஒன்று உண்டு.
அது எது?
நாவினால் சொல்லப்பட்ட சுடுசொல் அதனால் ஏற்பட்ட பழி ஆறாது. தீப்புண் ஆற தழும்பு வெளியே தெரியும். ஆனால் நாவினால் சொல்லிய சொல், மணப்புண்ணாகவே இருக்கும். ஆறவே ஆறாது.
இழிச்சொல், பழிச்சொல், கடுஞ்சொல், தீயசொல், சுடுசொல் ஆகியவை நாவினால் சுட்ட தழும்பாகும்.
(இது எல்லோருக்குமோ? அல்ல! அறிவு, பண்பு, மானம், மரியாதை உள்ளவர்களுக்கு மட்டுமே சுடுசொல் உறுத்திக் கொண்டிருக்கும். மற்றவர்கள் அப்பொழுதே மறந்து விடுவார்கள்).
ஆயினும், கடுமையாக இழிவாக பேசி எவரையும் புண்படுத்த கூடாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.