தனக்குத் தீங்கு நேரிடப் போவதை அறிந்த ஆமை உடனே நான்கு கால்களையும், தலையையும் ஆக ஐந்து உறுப்புக்களையும் ஓட்டு உடலுக்குள் அடக்கிச் சுருக்கிக் கொள்கிறது.
அதுபோல, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களால் ஏற்படக்கூடிய ஆசைகளைக் கட்டுப்படுத்தி, நல்வழிப்படுத்தும் தன்னடக்கமும், தன்னுணர்வும் உடையவருக்கு ஏழேழு தலைமுறைக்கும் பெருமை உண்டாகும்.
அடக்கம் இல்லாவிட்டால், அடங்காமை உண்டாகும்.
ஆசை நிறைவேறாத போது கோபம் வரும். ஆசையை வெல்பவனுக்கு கோபம் வராது. இல்லாதவன் அடக்கத்துடன் வாழ்வான். அதனால் அவன் பெருமை அடைவான். அதோடு அவனுடைய ஏழு தலைமுறையினரும் பெருமையால் மகிழும்.