நடுவு நிலைமை

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௫ - 115) 

பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்  (௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.  (௱௰௫)
— மு. வரதராசன்


தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.  (௱௰௫)
— சாலமன் பாப்பையா


ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்  (௱௰௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁂𑀝𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀫𑀼𑀫𑁆 𑀇𑀮𑁆𑀮𑀮𑁆𑀮 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀢𑁆𑀢𑀼𑀓𑁆
𑀓𑁄𑀝𑀸𑀫𑁃 𑀘𑀸𑀷𑁆𑀶𑁄𑀭𑁆𑀓𑁆 𑀓𑀡𑀺 (𑁤𑁛𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani
— (Transliteration)


kēṭum perukkamum illalla neñcattuk
kōṭāmai cāṉṟōrk kaṇi.
— (Transliteration)


Adversity and prosperity come and go, But an unbiased heart adorns the noble.

ஹிந்தி (हिन्दी)
संपन्नता विपन्नता, इनका है न अभाव ।
सज्जन का भूषण रहा, न्यायनिष्ठता भाव ॥ (११५)


தெலுங்கு (తెలుగు)
కలిమిలేములెల్ల కలుగునవే గాన
బుధులు న్యాయపథము వదలరెందు (౧౧౫)


மலையாளம் (മലയാളം)
ജീവിതത്തിൽ ഭവിക്കുന്നു നന്മയും തിന്മയും ക്രമാൽ; സജ്ജനം മനമെപ്പോഴും നീതിയിൽ നിലനിർത്തണം (൱൰൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಬಡತನ, ಸಿರಿತನಗಳೆರಡೂ ಇಲ್ಲದಿರುವುದೇನಲ್ಲ, ಅವು ಅವರವರ ಕರ್ಮಫಲಗಳು; ಈ ಎರಡು ಸ್ಥಿತಿಗಳಲ್ಲೂ ಹೃದಯದಲ್ಲಿ ಸಮಭಾವದಿಂದ ನಡೆದುಕೊಂಡರೆ, ಸಂಪನ್ನರಾದವರಿಗೆ ಅದೇ ಅಲಂಕಾರವೆನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೧೧೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सुखदु:खे हि संसारे कर्माधीने भविष्यत: ।
अतो मध्यस्थवृत्ति: स्यात् श्रेष्ठमाभरणं सताम् ॥ (११५)


சிங்களம் (සිංහල)
පාඩුව ද ලාභය- මෙ ලොවෙහි සොබා දහමයි ඒ දෙක්හි නොසැලෙන- සිතක් ඇති බව සුදන ගූණයයි (𑇳𑇪𑇥)

சீனம் (汉语)
不計利害之公正心, 乃仁者之榮飾. (一百十五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Baik dan jahat kapada semua datang-nya: tapi ketulusan hati ada-lah keagongan orang yang berbudi.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
인생에서 손실과 이득은 매우 자연적인 현상이다. 하지만 균형잡힌 마음은 훌륭한 명예가 된다. (百十五)

உருசிய (Русский)
Истинное украшение мудрых —-это беспристрастие в сердце,,оторое увеличивается вопреки лишениям или благополучию.

அரபு (العَرَبِيَّة)
الحكيم زينته فى تمسكه بالعدالة ولا يبالى إن أتته بالرفاهية أو بالنكال (١١٥)


பிரெஞ்சு (Français)
La misère et la prospérité sont le lot de tous; mais la gloire du Sage est de ne pas dévier, dans son cœur, des règles de l’équite.

ஜெர்மன் (Deutsch)
Gutes und Schlechtes kennzeichnen das Leben - beidem gerecht zu werden ist die Zierde des Weisen.

சுவீடிய (Svenska)
Motgång och framgång kommer icke utan skäl utan såsom frukt av tidigare onda eller goda gärningar. Att med sinnets jämnmod inse detta är de visas prydnad.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Pernicies et prosperitas non ex nihilo (sed ex merito atque culpa in vita priori conflato) oriuntur; (quare; animis non inclinari perfectis ornamentum est. (CXV)

போலிய (Polski)
«Ściśle zważ, kto miał rację, bez względu na wynik», Oto mędrca dewiza prawdziwa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22