நடுவு நிலைமை

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.   (௱௰௩ - 113) 

நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கி விட வேண்டும்  (௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.  (௱௰௩)
— மு. வரதராசன்


நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.  (௱௰௩)
— சாலமன் பாப்பையா


நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்  (௱௰௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀷𑁆𑀶𑁂 𑀢𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑀝𑀼𑀯𑀺𑀓𑀦𑁆𑀢𑀸𑀫𑁆 𑀆𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑁃
𑀅𑀷𑁆𑀶𑁂 𑀬𑁄𑁆𑀵𑀺𑀬 𑀯𑀺𑀝𑀮𑁆 (𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital
— (Transliteration)


naṉṟē tariṉum naṭuvikantām ākkattai
aṉṟē yoḻiya viṭal.
— (Transliteration)


Though profitable, turn away From unjust gains without delay.

ஹிந்தி (हिन्दी)
तजने से निष्पक्षता, जो धन मिले अनन्त ।
भला, भले ही, वह करे तजना उसे तुरन्त ॥ (११३)


தெலுங்கு (తెలుగు)
ఇంద్రవదని బుధుల కెక్కువ గాడెన్న
ధర్మ పక్షమునకుఁ దగనిదైన (౧౧౩)


மலையாளம் (മലയാളം)
നീതിയല്ലാത്ത മാർഗ്ഗേണ നേടുന്ന പൊരുളൊക്കെയും നിർദ്ദോഷമെന്ന് കണ്ടാലും നിരാകരിക്കലുതത്തമം (൱൰൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಸಮದರ್ಶಿತನವನ್ನು ತೊರೆದು ಉಂಟಾಗುವ ಸಂಪತ್ತು, (ಅದು ನಮಗೆ) ಒಳಿತನ್ನೇ ತಂದರೂ ಒಡನೆಯೇ ಕೈಬಿಡಬೇಕು. (೧೧೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
पक्षपातार्जितं वित्तं सुखं नैव प्रयच्छति ।
कदाचित् सुखदं भायादथापि परिवर्जयेत् ॥ (११३)


சிங்களம் (සිංහල)
නොමැදහත් ගූණයෙන් - ලද දනින් වුව යහපත මනැසින් මෙනෙහි කර - හනික අත්හැර දැමිය යුතූමයි (𑇳𑇪𑇣)

சீனம் (汉语)
由不義而來之成功, 雖屬有利無害, 亦應避免之. (一百十三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Biar pun hanya untong sahaja datang-nya, usah-lah di-jamah harta yang datang-nya serong.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
부당한 수단을 통해 제공되는 부에서 얻어질 수 있는 그 어떤 좋은 것이라도 멀리해야 한다. (百十三)

உருசிய (Русский)
Доставшееся неправедным путем богатство следует оставить, даже если оно приносит тебе блаженство.

அரபு (العَرَبِيَّة)
أمسك نفسك عن الثروة المكتسبة من الحرام ولو دفعت بك الى الرفاهية (١١٣)


பிரெஞ்சு (Français)
Abandonner sur-le-champ la richesse acquise hors des règles de la Justice, quand bien même elle ne causerait que du bien.

ஜெர்மன் (Deutsch)
Scheint etwas auch Gutes zu bringen - ist der Gewinn mit Parteilichkeit verbunden, lass ihn augenblicklich fahren.

சுவீடிய (Svenska)
Även om den syns dig förmånlig må du genast förkasta den rikedom som har inbringats av bristande oväld.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Quantumvis boni tibi afferat, fortunam, quae aequitatem migrando nascetur, statim abjicias. (CXIII)

போலிய (Polski)
Lepiej jest zrezygnować z bogactwa i chwały, Jeśli były nabyte złą drogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22