செய்ந்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.   (௱௯ - 109) 

ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்  (௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.  (௱௯)
— மு. வரதராசன்


முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.  (௱௯)
— சாலமன் பாப்பையா


ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது  (௱௯)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑀷𑁆𑀷 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢
𑀑𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑀷𑁆𑀶𑀼 𑀉𑀴𑁆𑀴𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum
— (Transliteration)


koṉṟaṉṉa iṉṉā ceyiṉum avarceyta
oṉṟunaṉṟu uḷḷak keṭum.
— (Transliteration)


Even a deadly hurt is soon effaced, If one recollects a past good turn.

ஹிந்தி (हिन्दी)
हत्या सम कोई करे, अगर बड़ी कुछ हानि ।
उसकी इक उपकार-स्मृति, करे हानि की हानि ॥ (१०९)


தெலுங்கு (తెలుగు)
తలకు మించి కీడుఁదలపెట్టు వాని దౌ
మేలు కొంత దలుపఁ జాలి కలుగు. (౧౦౯)


மலையாளம் (മലയാളം)
കൊലചെയ് വത് പോലുള്ള തിന്മ ചെയ്തവനാകിലും മുൻചെയ്ത നന്മയോർക്കുമ്പോളുള്ളിലാശ്വാസമായിടും (൱൯)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮುಂಚೆ ಉಪಕಾರ ಮಾಡಿದವರು, ಮುಂದೆ ಕೊಲ್ಲುವಂಥ (ಕಡು) ಕಷ್ಟಗಳನ್ನು ತಂದೊಡ್ಡಿದರೂ ಅವರು ಹಿಂದೆ ಮಾಡಿದ ಒಂದೇ ಒಂದು ಉಪಕಾರವನ್ನು (ಒಳಿತನ್ನು) ನೆನೆದರೆ ಸಾಕು. ಕಷ್ಟಗಳು ಪರಿಹಾರವಾಗುತ್ತದೆ. (೧೦೯)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
उपकृत्य प्रथमत: मरणान्तकरा यदि ।
उपकारा अपि कृता: लीयन्ते तत्र चैव ते ॥ (१०९)


சிங்களம் (සිංහල)
මරණට තරම් වන - අගූණ කළමුත් කිසිවෙක් පළමු කළ ගූණයක් - සිතන විට අගූණ වැනසී යයි (𑇳𑇩)

சீனம் (汉语)
憶念一善行, 可消除一致命之仇害. (一百九)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Luka yang paling pedeh pun akan di-ma‘afkan apabila budi baik orang yang melukakan itu di-kenangkan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
한 번의 도움을 기억하므로써, 지독한 피해조차 잊게 된다. (百九)

உருசிய (Русский)
Даже, величайшее зло будет прощено, если только вспомнишь крохотное благо, оказанное тебе обидчиком

அரபு (العَرَبِيَّة)
التذكر للفعل الحسن ربما يزيل من اذهاننا اثر الاصابة القاتلة من احد (١٠٩)


பிரெஞ்சு (Français)
Le souvenir d’un ancien bienfait efface une injure même mortelle

ஜெர்மன் (Deutsch)
Beginge einer auch ein Unrecht so schwer wie Mord - es wäre getilgt, hätte er früher nur eine einzige hilfreiche Tat getan.

சுவீடிய (Svenska)
Om någon begår ett brott jämförbart med mord blir det dock utplånat vid minnet av en enda välgärning.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si quis homicidio par maleficium in nos committat — simul ac unius tantum beneficii ab eo accepti meminerimus, illud evanescest. (CIX)

போலிய (Polski)
Jedno ciepłe wspomnienie o czyimś uśmiechu Zgładzi pamięć o ludzkiej przekorze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22