அன்புடைமை

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.   (௭௰௬ - 76) 

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும்  (௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது  (௭௰௬)
— மு. வரதராசன்


அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.  (௭௰௬)
— சாலமன் பாப்பையா


வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்  (௭௰௬)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀢𑁆𑀢𑀺𑀶𑁆𑀓𑁂 𑀅𑀷𑁆𑀧𑀼𑀘𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀷𑁆𑀧 𑀅𑀶𑀺𑀬𑀸𑀭𑁆
𑀫𑀶𑀢𑁆𑀢𑀺𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀂𑀢𑁂 𑀢𑀼𑀡𑁃 (𑁡𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Araththirke Anpusaar Penpa Ariyaar
Maraththirkum Aqdhe Thunai
— (Transliteration)


aṟattiṟkē aṉpucār peṉpa aṟiyār
maṟattiṟkum aḥtē tuṇai.
— (Transliteration)


Love supports virtue alone', say the fools.It supports vice as well.

ஹிந்தி (हिन्दी)
साथी केवल धर्म का, मानें प्रेम, अजान ।
त्राण करे वह प्रेम ही, अधर्म से भी जान ॥ (७६)


தெலுங்கு (తెలుగు)
పుణ్యమునకెగాక పురుషత్యమునకైన
వదల రాని దుగును వసుధ ప్రేమ. (౭౬)


மலையாளம் (മലയാളം)
ദയയാൽ ധർമ്മകർമ്മങ്ങൾ മാത്രമുൽപ്പന്നമായിടും എന്നതജ്ഞരുടെ ചിന്ത; ധീരതക്കുമതേ തുണ (൭൰൬)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಅರಿಯದವರು ಪ್ರೀತಿ ಧರ್ಮಕ್ಕೆ ಮಾತ್ರ ಆಧಾರವೆನ್ನುವರು. ಆದರೆ ಪರಿಶೀಲಿಸಿ ನೋಡಿದರೆ ವೀರಕ್ಕೂ ಅದೇ ಆಧಾರವೆಂದು ತಿಳಿಯುವುದು. (೭೬)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
साधनं धर्ममात्रस्य प्रेमेति कथनं वृथा ।
अधर्मवर्जनेऽप्येतत् साधनं वस्तुतत्त्वत: ॥ (७६)


சிங்களம் (සිංහල)
දහමටම වහලෙක - කියති නොදත්හු පේමය අදහමින් මිදුමට- පවා පිහිටන්නෙ එම ගූණයයි (𑇰𑇦)

சீனம் (汉语)
愚人謂惟善與德相偕, 實則抗惡亦德也. (七十六)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Dungu-lah mereka yang berkata chinta hanya untok orang2 yang jujor sahaja: kerana biar terhadap mereka yang jahat pun hanya chinta yang dapat menjadi teman yang kukoh.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
무지한 사람은 사랑이 미덕만을 감싼다고 말하지만 사랑은 모든 악에 대항해서 우리를 수호한다. (七十六)

உருசிய (Русский)
Лишь несведущие полагают, будто любовь к людям помогает на благочестивом пути Увы! Любовь, бывает, толкает человека на дурные дела

அரபு (العَرَبِيَّة)
يقول الجاهل يأن المحبة صديقة الخير بل هي أيضا دفاع ضدا الشر (٧٦)


பிரெஞ்சு (Français)
Les ignorants soutiennent que l’affection est la compagne seulement de la vertu; elle aide aussi à éviter le péché.

ஜெர்மன் (Deutsch)
Unwissende sagen, Liebe sei nur eine Hilfe des dharma – sie hilft jedoch auch aus dem adharma heraus.

சுவீடிய (Svenska)
”Kärleken är dygdens bästa stöd”, säger de ovisa. De vet ej att den också är till hjälp i kampen mot lasten.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Amorem clementiae adjutorem dicunt imperiti: etiam irae (in amicis corrigendis) adjutor est. (LXXVI)

போலிய (Polski)
Głupcy mówią: «Bądź dobry dla ludzi cnotliwych», A króż doda tym innym otuchy?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22