வாழ்க்கைத் துணைநலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.   (௬௰ - 60) 

மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்  (௬௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.  (௬௰)
— மு. வரதராசன்


ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.  (௬௰)
— சாலமன் பாப்பையா


குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது  (௬௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀗𑁆𑀓𑀮𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧 𑀫𑀷𑁃𑀫𑀸𑀝𑁆𑀘𑀺 𑀫𑀶𑁆𑀶𑀼 𑀅𑀢𑀷𑁆
𑀦𑀷𑁆𑀓𑀮𑀫𑁆 𑀦𑀷𑁆𑀫𑀓𑁆𑀓𑀝𑁆 𑀧𑁂𑀶𑀼 (𑁠)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Mangalam Enpa Manaimaatchi Matru
AdhanNankalam Nanmakkat Peru
— (Transliteration)


maṅkalam eṉpa maṉaimāṭci maṟṟu ataṉ
naṉkalam naṉmakkaṭ pēṟu.
— (Transliteration)


A good wife is called boon to a house; Besides that, good children its jewels.

ஹிந்தி (हिन्दी)
गृह का जयमंगल कहें, गृहिणी की गुण-खान ।
उनका सद्भूषण कहें, पाना सत्सन्तान ॥ (६०)


தெலுங்கு (తెలుగు)
సాధ్వికిఁ దగినట్టి సంతాన మబ్బిన
మంగళముగ గృహము మహిమ గాంచు . (౬౦)


மலையாளம் (മലയാളം)
ഗുണസമ്പന്നയാം പത്നി ഭവനത്തിന്ന് മംഗളം; നല്ലസന്താനമുണ്ടായാലലങ്കാരവുമായിടും (൬൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನೆಯೊಡತಿಯ (ಹೆಂಡತಿ) ಸದ್ಗುಣವೇ ಮನೆಗೆ ಮಂಗಳಕರ; ಒಳ್ಳೆಯ ಮಕ್ಕಳನ್ನು ಪಡೆಯುವುದು ಅದಕ್ಕೆ ಮತ್ತಷ್ಟು ಶೋಭೆ ನೀಡುವುದು. (೬೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
सञ्चरित्रवती भार्या माङ्गल्यं जीवितस्य सा ।
सत्पुत्राणामवाप्तितस्तु ततो भूषणवद्‍भवेत् ॥ (६०)


சிங்களம் (සිංහල)
බිරිය සතූ හොඳ ගූණ- මඟූල් ලකූණුයි සැමවිට එයට අබරණ වේ- ලැබුම දරුවන් ගූණ නැණැති වූ (𑇯)

சீனம் (汉语)
幸福之最大者爲光榮之家庭, 後世蒙其餘蔭. (六十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Anugerah yang paling tinggi ia-lah rumah-tangga yang murni: dan punchak kegemilangan-nya ia-lah anak yang berjasa.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
좋은 아내는 가족을 위한 축복이고 좋은 자녀는 귀중한 보석이다. (六十)

உருசிய (Русский)
Достоинства Совершенной жёны создают счастье в семье,, честные дети — это драгоценные камни этого счастья

அரபு (العَرَبِيَّة)
نعمة البيت فى فضل ربتها واولادها من زينتها ومحاسنها (٦٠)


பிரெஞ்சு (Français)
Avoir une épouse vertueuse est, dit-on, un bien; avoir de bous enfants est l’ornement de ce bien.

ஜெர்மன் (Deutsch)
Die Tugend der Frau ist ihre Güte – gute Kinder sind ihr Schmuck.

சுவீடிய (Svenska)
En god hustru är hemmets ära. Gåvan av goda barn är dess skönaste prydnad.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Uxoris praestantiam magnum bonum dicunt; pulchrum ei orna-mentum addit bonorum liberorum procreatio. (LX)

போலிய (Polski)
Honor męża kobieta podpiera swą cnotą, Którą dzieciom w dziedzictwie zostawi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22