இல்வாழ்க்கை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.   (௪௰௨ - 42) 

துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்  (௪௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.  (௪௰௨)
— மு. வரதராசன்


மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்  (௪௰௨)
— சாலமன் பாப்பையா


பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்  (௪௰௨)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀢𑀼𑀯𑁆𑀯𑀸 𑀢𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀇𑀮𑁆𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀷𑁆 𑀢𑀼𑀡𑁃 (𑁞𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum
Ilvaazhvaan Enpaan Thunai
— (Transliteration)


tuṟantārkkum tuvvā tavarkkum iṟantārkkum
ilvāḻvāṉ eṉpāṉ tuṇai.
— (Transliteration)


The householder supports the needs of Renunciates, ancestors and the poor.

ஹிந்தி (हिन्दी)
उनका रक्षक है गृही, जो होते हैं दीन ।
जो अनाथ हैं, और जो, मृतजन आश्रयहीन ॥ (४२)


தெலுங்கு (తెలుగు)
సాదు, పేద, దీను లాదిగ మువ్వుర
కండగాను గేస్తు డుండు నెపుడు. (౪౨)


மலையாளம் (മലയാളം)
സന്യാസം സ്വീകരിച്ചോർക്കും പൊരുളില്ലാദരിദ്രർക്കും യാചനം തൊഴിലായോർക്കും ഗൃഹസ്ഥൻ തുണയായിടും (൪൰൨)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಆಶ್ರಯವಿಲ್ಲದವರು, ದರಿದ್ರರು, ಸತ್ತವರು ಎಲ್ಲರಿಗೂ ಗೃಹಸ್ಥನೇ ಆಧಾರ. (೪೨)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
यतीन् मृतान् दरिद्रांश्च निर्गतीन् अतिथीनपि ।
गृहस्थोऽन्नादिदानेन स्वाश्रितानपि रक्षति ॥ (४२)


சிங்களம் (සිංහල)
තවසුන් අ අසරණ - අය සහ මැරුණ වුන් හට ගහ පතියා නිතර - පිහිට වේ ගිහි දිවිය රක්නා (𑇭𑇢)

சீனம் (汉语)
在家之長者爲孤獨者乞食者野死者所仰賴. (四十二)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kepala keluarga ada-lah rakan kapada pitri dan fakirmiskin serta mereka yang telah menyingkirkan dunia.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가정적인 사람은 수도자들, 빈곤한 사람들, 버림받은 사람들을 지원한다. (四十二)

உருசிய (Русский)
Исполненный добродетели семьянин служит поддержкой отрешившимся от мирской суеты, нищим и умершим **

அரபு (العَرَبِيَّة)
رب البيت هو الدعامة التى يعتمد عليها الزهاد و المحتاجون والموتى (٤٢)


பிரெஞ்சு (Français)
Celui qui vit de la vie de famille est le soutien de ceux qui ont renoncé au monde, des miséreux et de ceux qui sollicitent la charité.

ஜெர்மன் (Deutsch)
Der Hausherr ist der Unterhalt für die Asketen, die Armen und die Toten.

சுவீடிய (Svenska)
För de övergivna, de utblottade och de döda bör familjefadern vara ett fast stöd.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Paterfamilias orbatis, pauperibus et defunctis (manibus aquam spargendo) auxilio est. (XLII)

போலிய (Polski)
Mnicha ma zaopatrzyć, nakarmić biedaka, Oraz złożyć umarłym ofiary.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22