இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.   (௪௰௧ - 41) 

இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்  (௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.  (௪௰௧)
— மு. வரதராசன்


மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.  (௪௰௧)
— சாலமன் பாப்பையா


பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்  (௪௰௧)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀮𑁆𑀯𑀸𑀵𑁆𑀯𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀸𑀷𑁆 𑀇𑀬𑀮𑁆𑀧𑀼𑀝𑁃𑀬 𑀫𑀽𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀸𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀢𑀼𑀡𑁃 (𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum
Nallaatrin Nindra Thunai
— (Transliteration)


ilvāḻvāṉ eṉpāṉ iyalpuṭaiya mūvarkkum
nallāṟṟiṉ niṉṟa tuṇai.
— (Transliteration)


A householder is a steadfast friend To the other three orders in their virtuous paths.

ஹிந்தி (हिन्दी)
धर्मशील जो आश्रमी, गृही छोड़ कर तीन ।
स्थिर आश्रयदाता रहा, उनको गृही अदीन ॥ (४१)


தெலுங்கு (తెలుగు)
కాపురస్తుడన్నఁ గాపాడగలవాఁడు
ముఖ్యమతని నమ్మి మువ్వురుండ్రు (౪౧)


மலையாளம் (മലയാളം)
ഗൃഹനാഥൻറെ സഹായത്താലിതരാശ്രമവാസികൾ യഥായോഗ്യം സ്വധർമ്മങ്ങൾ നിർവ്വഹിക്കുന്നു ക്ഷേമമായ് (൪൰൧)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮನೆವಾರ್ತೆಯುಳ್ಳವನು ಧರ್ಮಗುಣ ಶೀಲರಾದ ಬ್ರಹ್ಮಚಾರಿ, ವಾನಪ್ರಸ್ಥ, ಸಂನ್ಯಾಸಿ ಎಂಬ ಮೂವರಿಗೆ ಅವರವರ ಧರ್ಮದಲ್ಲಿ ಸಾಗಲು ಬೆಂಬಲವಾಗುತ್ತಾನೆ. (೪೧)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
त्रयाणामपि वर्णानां स्वधर्ममनुतिष्ठताम् ।
गृहस्थो धर्मनिरतो नित्यं साह्यकरो मत्: ॥ (४१)


சிங்களம் (සිංහල)
යහ මඟ ගමන් ගත් - තිදෙනාට නිරතූරුව ම එම යහ මඟෙහි දි - උදව් දෙන්නේ නියම ගිහියා (𑇭𑇡)

சீனம் (汉语)
在家之長者乃其他三行者之支持者. (四十一)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kepala keluarga ia-lah pelindong yang utama kapada mereka yang mengikuti tiga jalan hidup yang lain.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가정적이며 훌륭한 자는 부모, 아내, 자녀를 지원하는 사람이다. (四十一)

உருசிய (Русский)
Тот, кто ведет семейную жизнь, является надежной опорой тем, кто следует трем другим путям праведности *

அரபு (العَرَبِيَّة)
من الحياة فى تدبير شئونها من الخير (٤١)


பிரெஞ்சு (Français)
Le chef de famille le ferme soutien des (hommes des) trois autres clases qui ont renoncé au monde (étudiant, anachorète et ascète) en ce qu’illes aide à persister dans leur bonne voie.

ஜெர்மன் (Deutsch)
Der Hausherr ist der beständige Unterhalt für alle „drei“ auf ihrem jeweiligen Pfad der Rechtschaffenheit.

சுவீடிய (Svenska)
Den må kallas en god husbonde som ger stöd och hjälp åt dem som vandrar enligt god ordning på någon av de tre vägarna.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
paterfamilias honestis (illis) tribus (i. e. sacrorum librorum studio-sis, anachoretis, mendicantibus religiosis) in via bona constanti auxilio est. (XLI)

போலிய (Polski)
Pana Domu obciąża jałmużna trojaka, Według dobrych zwyczajów prastarych:
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22