அறன்வலியுறுத்தல்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.   (௩௰௮ - 38) 

செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்  (௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.  (௩௰௮)
— மு. வரதராசன்


அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.  (௩௰௮)
— சாலமன் பாப்பையா


பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்  (௩௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀻𑀵𑁆𑀦𑀸𑀴𑁆 𑀧𑀝𑀸𑀅𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀸𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀅𑀂𑀢𑁄𑁆𑀭𑀼𑀯𑀷𑁆
𑀯𑀸𑀵𑁆𑀦𑀸𑀴𑁆 𑀯𑀵𑀺𑀬𑀝𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑀮𑁆 (𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan
Vaazhnaal Vazhiyataikkum Kal
— (Transliteration)


vīḻnāḷ paṭā'amai naṉṟāṟṟiṉ aḥtoruvaṉ
vāḻnāḷ vaḻiyaṭaikkum kal.
— (Transliteration)


The good you do without wasting a day Is the stone that blocks the way to rebirth.

ஹிந்தி (हिन्दी)
बिना गँवाए व्यर्थ दिन, खूब करो यदि धर्म ।
जन्म-मार्ग को रोकता, शिलारूप वह धर्म ॥ (३८)


தெலுங்கு (తెలుగు)
ఉన్ననాళ్ళు మరువకున్నచో ధర్మంబు
భవము నడ్డగించు బండ యదియె. (౩౮)


மலையாளம் (മലയാളം)
ധർമ്മവിഘ്നം ഭവിക്കാതെ ജിവകാലം കഴിക്കുകിൽ പുനർജന്മകവാടത്തെ തടയും ശിലയായിടും (൩൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ದಿನವೊಂದೂ ವ್ಯರ್ಥಮಾಡದಂತೆ ಸದ್ದರ್ಮವನ್ನು ಕೈಗೊಂಡರೆ ಅದು ಒಬ್ಬನ ಮರು ಹುಟ್ಟು ಇಲ್ಲದಂತೆ ಮಾಡುತ್ತದೆ. ಅವನ ಮರುಹುಟ್ಟಿನ ಹಾದಿಯಲ್ಲಿ ಅದು ಅಡ್ಡವಾಗಿಟ್ಟ ಕಲ್ಲಿನಂತೆ ನೆರವಾಗುತ್ತದೆ. (೩೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनुस्यूततया धर्मकार्ये जन्मनि यत् कृतम् ।
तत् पुनर्जन्ममार्गस्य निरोधकशिलायते ॥ (३८)


சிங்களம் (සිංහල)
දහමෙහි පිහිටියෝ- නම් යම් කෙනෙක් නිරතව සසර මග වැසුමට - එයත් මහ කලු ගලක් බඳු වේ (𑇬𑇨)

சீனம் (汉语)
人日日行道, 卽可免輪迴之苦. (三十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Sa-kira-nya kau berbakti seluroh hidup-mu tanpa membadzirkan sa- hari pun, kamu sa-olah2 membina tembok yang menutup jalan kelahiran-mu yang akan datang.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
지속적인 선행은 환생의 고리를 차단하는 돌과 같은 역할을 한다. (三十八)

உருசிய (Русский)
Если ты денно и нощно неустанно следуешь по благой стезе, то твои усилия станут несокрушимой гранитной горой, которая прекратит твой мучительный путь перерождений

அரபு (العَرَبِيَّة)
إن صنع احد خيرا كل يوم فقد وضع حجرا ليـسـد به طريقه لميلاده لمرة ثانية (٣٨)


பிரெஞ்சு (Français)
La vertu pratiquée tous jours, sans qu’il y en ait un de perdu, est la pierre qui ferme le chemin des naissances futures.

ஜெர்மன் (Deutsch)
Übt jemand dharma, ohne auch nur einen Tag auszulassen, wird er zum Stein, der die Geburten abblockt.

சுவீடிய (Svenska)
Om du gör gott utan att slösa bort någon dag blir det den sten som spärrar vägen för återfödelsens kretsgång.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Si nullum diem perdi patiens rectc feceris, hic erit lapis, qui diei vitae viam occludet (i. e. qui impediet, quominus denuo nascaris). (XXXVIII)

போலிய (Polski)
Ten, co czyni dla innych - lub tego pominie - Plany zbierze w następnym żywocie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


துன்பத்தை அடைக்கும் கதவு — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவருடைய வாழ்நாளில் துன்பம் நேரிடுமானால், அது வராமல் தடுப்பது எப்படி?

உண்பதும், உறங்குவதும் சுகிப்பதும் விளையாடுவதுமாக, வீண் பொழுது போக்காமல், நாள்தோரும் நல்ல செயல்களை செய்துவருகின்றவனுக்கு துன்பம் வருமேயானால், அவனுடைய நல்ல செயல்கள், துன்பத்தின் வழியை அடைக்கும் கல் போல அமையும்.

அடைக்கும் கல் என்பதை அடைக்கும் கதவு என்றும் கொள்ளலாம்.

ஒருவன் செய்யும் நல்ல செயல்கள், அவனுக்கு உண்டாகக் கூடிய துன்பத்திலிருந்து அவனை காப்பாற்றும்.


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22