வான்சிறப்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.   (௰௪ - 14) 

‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்  (௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்  (௰௪)
— மு. வரதராசன்


மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்  (௰௪)
— சாலமன் பாப்பையா


மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்  (௰௪)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑀭𑀺𑀷𑁆 𑀉𑀵𑀸𑀅𑀭𑁆 𑀉𑀵𑀯𑀭𑁆 𑀧𑀼𑀬𑀮𑁆𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀯𑀸𑀭𑀺 𑀯𑀴𑀗𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀸𑀮𑁆 (𑁛𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Erin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrik Kaal
— (Transliteration)


ēriṉ uḻā'ar uḻavar puyaleṉṉum
vāri vaḷaṅkuṉṟik kāl.
— (Transliteration)


If that bounty called rain decrease, Ploughing by ploughmen would also cease.

ஹிந்தி (हिन्दी)
कर्षक जन से खेत में, हल न चलाया जाय ।
धन-वर्षा-संपत्ति की, कम होती यदि आय ॥ (१४)


தெலுங்கு (తెలుగు)
మడకబట్టి దున్న మరతురు రైతాంగ
మదను లోన వర్ష మల్ప మైన (౧౪)


மலையாளம் (മലയാളം)
മാരിയാകും വളം തീരെ കുറവായെന്ന് വന്നിടിൽ കൃഷിക്കാർ കന്നുപൂട്ടാനായ് തയ്യാറാവില്ലൊരിക്കലും (൰൪)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮೋಡದಿಂದ ಸುರಿಯುವ ಮಳೆಯ ನೀರಿನಾಶ್ರಯವು ಬಲಗುಂದಿತಾದರೆ ರೈತರ ವ್ಯವಸಾಯವೂ ನಿಂತಂತೆಯೇ (೧೪)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
नष्टायां वर्षसंपत्तौ धान्योत्पादनतत्परा: ।
ला‌ङ्गलेन भुवं नैव कर्षयेयु: कृषीवला: ॥ (१४)


சிங்களம் (සිංහල)
ගොවිතැන් බත් කරන - ගොවියෝ සදා වෙහෙසෙන වැසි පල නොවී නම්- නිරත සී සෑම වුව නොකරත් (𑇪𑇤)

சீனம் (汉语)
若自然停賜其雨水, 耕人將無以運其犁鋤. (十四)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Petani akan berhenti membajak sa-kira-nya panchoran langit sudah kering.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
비가 충분히 내리지 않는다면, 농부는 땅을 일굴 수 없다. (十四)

உருசிய (Русский)
Если скрытый в облаках источник богатств иссякнет,,о и земледелец отвернется от сохи

அரபு (العَرَبِيَّة)
الفلاحون سينقطعون عن الحرث إن لم تمطر السحب الهاطلة بماءها الوفير (١٤)


பிரெஞ்சு (Français)
Les laboureurs ne labourent pas à l’époque où la source de la pluie trait.

ஜெர்மன் (Deutsch)
 Fällt zu wenig Regen, pflügen die Bauern nicht.

சுவீடிய (Svenska)
Om regnets flödande rikedom avtager kan inga bönder plöj a med plogen.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Aratro non arabunt (agricolae). si nubis aquarum ubertas minuitur (XIV)

போலிய (Polski)
Z braku wody niezbędnej dla ziemi i ziarna Sprzęt rdzewieje i głodne są woły.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உழவும் மழையும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உழவர்கள் ஏழைப்பூட்டி, நிலத்தை உழுவதற்குமுன், மழை பெய்து, பூமி நனையவேண்டும்.

மழை பெய்யாவிட்டால், உழவர்கள் பயிர்த் தொழிலைச் செய்யமாட்டார்கள்.

மழை என்னும் வருவாய் தரக்கூடிய வளம் குறையும்.

பஞ்சமும் பட்டினியும், மக்களையும் உயிர் இனங்களையும் வாட்டி வதைக்கும்.


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22