Reading hints

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.   (௲௯௰௮ - 1098) 

Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap
Pasaiyinal Paiya Nakum
— (Transliteration)


acaiyiyaṟku uṇṭāṇṭōr ē'eryāṉ nōkkap
pacaiyiṉaḷ paiya nakum.
— (Transliteration)


Her gentle smile to my pleading look Adds beauty to her gentle nature.

Tamil (தமிழ்)
அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு (௲௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது. (௲௯௰௮)
— மு. வரதராசன்


யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது. (௲௯௰௮)
— சாலமன் பாப்பையா


நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள் (௲௯௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀘𑁃𑀬𑀺𑀬𑀶𑁆𑀓𑀼 𑀉𑀡𑁆𑀝𑀸𑀡𑁆𑀝𑁄𑀭𑁆 𑀏𑀏𑁆𑀭𑁆𑀬𑀸𑀷𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀧𑁆
𑀧𑀘𑁃𑀬𑀺𑀷𑀴𑁆 𑀧𑁃𑀬 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁥𑁣𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
मैं देखूँ तो, स्निग्ध हो, करे मंद वह हास ।
सुकुमारी में उस समय, एक रही छवी ख़ास ॥ (१०९८)


Telugu (తెలుగు)
చూచినంత నన్ను జూచిన నొయ్యారి
మందహాసమందు మరులు గలదు. (౧౦౯౮)


Malayalam (മലയാളം)
നേരേ ഞാൻ നോക്കിടും നേരം ഭംഗിയായ്‌ പുഞ്ചിരിച്ചിടും അന്നേരമഴകാകുന്നു തളിർ മേനിക്കു പുഞ്ചിരി (൲൯൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ನಾನು ನೋಡುವಾಗ (ಅವಳು) ಪ್ರೇಮಾರ್ದ್ರಳಾಗಿ ಮೈದು ನಗೆ ಸೂಸುವಳು; ಲತಾಂಗಿಯಾದ ಅವಳಲ್ಲಿ ಆಗ ಒಂದು ಬಗೆಯ ಚೆಲುವು ಅರಳುವುದು. (೧೦೯೮)

Sanskrit (संस्कृतम्)
मयि पश्यति तद् दृष्ट्‍वा प्रीता मन्दं हसेदियम् ।
तस्याश्चलन्त्यास्तत्कृत्य रमणीयं प्राकाशते ॥ (१०९८)


Sinhala (සිංහල)
මා බලන කල්හි- පේමෙන් පායි මදහස සිරිබර තරුණියගෙ - ඔපය ඉන් තව තවත් වැඩුනා (𑇴𑇲𑇨)

Chinese (汉语)
當余以懇求之狀望之, 伊人報以輕柔之微笑; 此淑女之微笑, 惑人甚矣. (一千九十八)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Gadis nan ramping, lentor had-nya bila melihat tenongan hiba-ku dan senyuman lembut merekah di-bibir-nya: dan senyuman itu me- nambahkan lagi kejelitaan-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
날씬한처녀는우아한모습을하고있​​다. 그녀는애인이바라볼때미소를짓는다.  (千九十八)

Russian (Русский)
Разгадав в моих глазах любовь, она радостно смеется,,то придает особое очарование ей и ее грации

Arabic (العَرَبِيَّة)
الحناء النحيلة قلبها يذوب عند ما تتوقع أن ينظر إليها محبهما ثم تبتسم إبتساما بيطا الذى هو باعث لازدياد حسنها وجمالها (١٠٩٨)


French (Français)
Mon regard l'apitoie et la fait sourire doucement. Dans ce sourire apparaît un bon signe, de la part de celle oui résiste.

German (Deutsch)
Sehe ich die Freundliche an, lächelt sie freundlich - das ist ihre Schönheit mit dem wiegenden Gang.

Swedish (Svenska)
Det finns dock någon godhet hos denna späda varelse. När jag bedjande betraktar henne veknar hon och ler med ömhet mot mig.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Lenis ilia intuenti mihi leniter arridet; mobilem naturnrn. habenti (illi) in ea re uniea venustns est. (MXCVIII)

Polish (Polski)
A gdy pragnę się bronić przed jej trybunałem, Wybuch śmiechu mi wnet odpowiada.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22