தகுதி இல்லாதவன் கையில் பதவி கிடைத்து விட்டால், பதவி வெறி கொண்டு, அதிகாரத்தை கெட்ட வழியில் பயன்படுத்திவிடுவான். அதனால், அந்தப் பதவியின் பெருமை அழிந்துவிடும். கெட்டுப் போகும்.
அதுபோல, செல்வமும் தகுதியற்றவனிடம் சேருவதனால், செய்ய வேண்டிய சிறப்பான காரியங்களை செய்யாமல் பிறருக்கு தீமைகள்- கெடுதல்களை செய்வதற்கும் அது துணை ஆகிவிடும்.