காலைக் கழுவாமல் அழுக்கோடு சுத்தமான படுகையில் வைத்தால், படுக்கையும் அழுக்காகும். உறங்குபவனுக்கும் அருவருப்பு உண்டாகும். தூக்கமும் கெடும்.
அதுபோல, அறிவாளர்கள், சபையில் அமைதியாக இருப்பார்கள். எதையாவது நல்ல கருத்தை பற்றி விவாதித்துக் கொண்டு இருப்பார்கள்.
அப்பொழுது அந்த சபையினுள் அறிவு இல்லாத ஒருவன் புகுந்தால், அமைதி கெடுமோ என்ற அருவருப்பு உண்டாகக்கூடும். மேலும் அவன் எதையாவது பேசுவானாகில், அறிவாளர்களுக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தும்.
அறிவாளர்கள் அறிவு இல்லாதவர்களின் சகவாசத்தை அருவருப்பாக கருதுவார்கள்.