ஒரு குழந்தை நன்றாக வளரவேண்டும் என்றால், பெற்றெடுத்த தாயின் பராமரிப்பு, சிறப்பாக இருக்க வேண்டும். அதுபோல, அன்பும் அதன் பக்குவத்தால் உண்டான அருளும், வளர வேண்டும் என்றால், செல்வம் போன்ற தாயை பெற்றிருக்க வேண்டும்.
பத்து மாதம் சுமந்த பிறகுதான் தாய் குழந்தையை பெறுகிறாள். அதுபோல, பல காலம் தொடர்ந்து அன்பு செலுத்தி நன்மை செய்த பிறகே அருண் உண்டாகிறது.
எல்லோருக்கும் ஓர் குலம் என்று எண்ணி, அவர்கள் மகிழ்ந்திருக்க கண்டு தான் இன்புறுவது அருளாகும். அருள் என்னும் குழந்தைக்கு அன்பு தாய் ஆகும். அந்த அன்புக்கு துணையான செல்வம் செவிலித் தாய் ஆகும். அன்பு பெருகுவதற்கும், அருள் வளர்வதற்கும் செல்வம் இன்றியமையாதது. செல்வம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
(அருள் என்பதை இரக்கம், கருணை என்று கூறுவர். செவிலித்தாய் என்பது வளர்ப்புத் தாய்)