விளைச்சலை தருகின்ற நிலத்திலே, பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை பிடுங்கி, அப்புறப்படுத்துகின்றான் விவசாயி.
அதுபோல, நாட்டிலே வாழும் மக்கள் பயமில்லாமல், அமைதியாக, செழிப்பாக வாழ்வதற்கு கொடுமையான கொலை பாதகர்களை தக்கபடி தண்டித்து, நேர்மையான ஆட்சி செலுத்துவது மன்னனுடைய கடமை.
மக்களுக்கு துன்பம் உண்டாக்கி, கொன்று அழிப்போரைக் கொலையின் குடியார் எனக் குறிப்பிடுகிறது.
(பொதுவாக, நாட்டில் குற்றம் புரிவோருக்கு குற்றத்தின் தன்மைக்கு ஏற்றபடி, அபராதம், சிறை தண்டனை, மரண தண்டனை முதலானவற்றை அளித்து நல்லாட்சி நிலவ செய்வது ஆட்சியாளர் ஆகிய அரசின் பொறுப்பு)