உலகத்தில் உள்ள சகல உயிரினங்களும், வானத்திலிருந்து பொழிகின்ற மழையை நம்பி வாழ்கின்றன. மழை பொய்க்காமல் பெய்யுமானால், இயற்கை வளம்- உணவுப்பொருள் பெருகும். மக்கள் செழிப்பாக வாழ்வார்கள்.
அதுபோல, அரசனின் ஆட்சி நேர்மையானதாக இருந்தால், குடிமக்கள் பயம் இல்லாமல் அமைதியாக வாழமுடியும்.
அரசனின் ஆட்சிமுறை சீர்கேடு அடைந்தால், குடிமக்கள் துன்பம் அடைவார்கள், முணுமுணுப்பார்கள், கிளர்ச்சி ஏற்படும்.
(அரசன் என்ற சொல்லுக்கு, ஆட்சியாளர்- ஆள்வோர் என்று அர்த்தம் கொள்ளலாம் என அறிஞர்கள் கூறியுள்ளனர்)