தண்ணீருக்குத் தனி நிறமும், ருசியும் இல்லை.
என்றாலும், அது ஓடி வருகின்றது அல்லது ஊறுகின்ற மண்ணின் இயல்புக்கு ஏற்றவாறு, நிறமும், ருசியும் பெறுகிறது.
அதாவது, செம்மண்ணில் ஓடினால் சிவப்பாகவும், கருப்பு மண்ணில் ஓடினால் கருப்பாகவும் மாறுகிறது. மேலும் அந்த நிலத்தின் சுவையையும் பெறுகிறது.
அதுபோல, மக்களுக்கும், அவரவர் சார்ந்திருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறு குணங்கள் (அறிவு) மாறுபடும்.
உயர்ந்தோர் இடத்தில் சேர்ந்து இருந்தால், அவரது பெருந்தன்மையும், வந்து ஓரிடத்தில் சேர்ந்து இருந்தால், அவரது சிறுமையும் அமைந்துவிடுகின்றன.
எனவே, உயர்ந்தோர் சேர்க்கை மிகவும் முக்கியம் என்ற உண்மை தெளிவாகிறது.