எந்த வியாபாரம் செய்யப் போனாலும் மூலதனம் முதல் தேவையாகும்.
முதல் போடாமல் இலாபம் கிடைக்குமா? கிடைக்காது கிடைக்காது.
அதுபோல, கட்டடத்தில் பாரம் தாங்கும் தூண் போன்று, தன்னை ஆதரித்து பாதுகாக்கும் பெரியோர் துணையைப் பெறாதவர்களுக்கு புகழும் பெருமையும் கிடைக்காது.
வியாபாரத்திற்கு மூலதனம் போல் வாழ்க்கையின் சிறப்புக்கு பெரியோர் துணை மிகவும் முக்கியம் என உணர்த்தப்படுகிறது.