இந்த உயிரானது வாதம், பித்தம், கபம் என்னும் நோயுள்ள உடலில் ஒண்டுக் குடித்தனம் இருந்து வாழ்ந்து வருகிறது.
ஆனால், நோய் நொடி இல்லாமல், நிலையாக வாழ்வதற்கு தனக்கென சொந்தமான ஒரு உடல் இல்லை.
இப்படியாக, இந்த உயிர் ஒரு உடலில் நிலைத்திருக்காமல், வெவ்வேறு உடலில் புகுந்து புகுந்து, ஓடிக் கொண்டிருக்கிறதைப் பார்த்தால்,
ஒவ்வொரு உடலிலும் சில காலம் ஒண்டு குடித்தனம் இருந்துவிட்டு ஓடிப்போகிற இந்த உயிரானது, நிரந்தரமாக, நான் தங்கியிருப்பதற்கு தகுந்த ஒரு வீட்டை தேடி அலைகிறது போலும்!