உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தகையது?
பறவையானது முட்டையில் கருவாக தோன்றி, பிறகு பறக்கும் பருவம் வரை வளர்ந்து, அதன் பின் முட்டையை உடைத்து தனியாக கிடத்திவிட்டு பறந்து போய்விடுகிறது.
அதுபோல, உயிரானது உடலோடு கூடிப் பிறந்து, பக்குவமான நிலை வரை வளர்ந்து, பிறகு அந்த உடலைவிட்டு பிரிந்து, பறந்து சென்று விடுகிறது.
பறவைக்கு முட்டை ஆதாரமாகிறது, அதுபோல, உயிருக்கு உடல் ஆதாரமாய் அமைகிறது.
பறக்கும் நிலை பெற்ற பறவை திரும்பவும் முட்டைக்கும் புகாது. அதுபோல, முதிர்வு (பரிபாகம்) அடைந்த உயிர் மீண்டும் உடல் பிரவேசத்துக்கு உடன்படாது.
இதுவே, உயிருக்கும் உடலுக்கும் உள்ள நட்பு.