பிறந்து, வளர்ந்து, மறைகின்ற தன்மையுடைய உடலைப் பெற்ற உயிர்களுக்கு எல்லாம், அந்த உடல் நின்ற கால அளவை காட்டுவது நாள். அடுத்து அடுத்து பல நாட்களாக வந்து காலத்தைக் காட்டுவது.
அத்தையை நான் சாதாரணமானது அல்ல!
அது வாள்- கத்தி போன்றது. ஏனென்றால், உடலோடு கூடிய வாழ்வானது, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போவதால், அப்படிக் குறைவை செய்கின்ற நாள் வாள் என்று கூறப்படுகிறது. அதாவது, வாள் வெட்டிக்கொண்டே போகிறது அல்லவா?
உடலின் நிலையாமையையும் உடலின் பயனையும் அறியாதவர்கள் அந்த நாளை வீண் பொழுதாக கழிப்பார்கள்.
உடலில் உற்ற பயனை அடையவேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்க்கு நாளானது வாளாகக் காணப்படும்.
(வாளை ரம்பம் என்றும் கூறுவார்கள்)