Renown

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.   (௨௱௩௰௬ - 236) 

Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar
Thondralin Thondraamai Nandru
— (Transliteration)


tōṉṟiṉ pukaḻoṭu tōṉṟuka aḥtilār
tōṉṟaliṉ tōṉṟāmai naṉṟu.
— (Transliteration)


Be born, if you must, for fame; Or else better not to be born at all.

Tamil (தமிழ்)
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது (௨௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது. (௨௱௩௰௬)
— மு. வரதராசன்


பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது. (௨௱௩௰௬)
— சாலமன் பாப்பையா


எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது (௨௱௩௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀷𑁆 𑀧𑀼𑀓𑀵𑁄𑁆𑀝𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀓 𑀅𑀂𑀢𑀺𑀮𑀸𑀭𑁆
𑀢𑁄𑀷𑁆𑀶𑀮𑀺𑀷𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁓𑁤𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
जन्मा तो यों जन्म हो, जिसमें होवे नाम ।
जन्म न होना है भला, यदि न कमाया नाम ॥ (२३६)


Telugu (తెలుగు)
వెలయ వలయు కీర్తి వెలయంగ లేకున్న
మనుట కన్న ముంచి మరుగు పడుట. (౨౩౬)


Malayalam (മലയാളം)
പ്രശംസ നേടുവാൻ തക്ക ഗുണത്തോടെ മനുഷ്യനായ് ജന്മമാകണമല്ലെങ്കിൽ ജന്മമില്ലായ്കിലുത്തമം (൨൱൩൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಹುಟ್ಟಿದರೆ ಹೊಗಳಿಕೆ (ಕೀರ್ತಿ) ಯೊಂದಿಗೆ ಹುಟ್ಟಬೇಕು. ಅದಿಲ್ಲವಾದರೆ ಹುಟ್ಟುವುದಕ್ಕಿಂತ ಹುಟ್ಟದಿರುವುದೇ ಲೇಸು. (೨೩೬)

Sanskrit (संस्कृतम्)
यदीष्टं मानुषं जन्म कीर्त्या जननमुत्तमम्।
अन्यथा मृगजन्मैव श्‍लाघ्यते मर्त्यजन्मन:॥ (२३६)


Sinhala (සිංහල)
උපදිනොත් උපදින් - යසසට ඉලක්කය වී එහෙමත් නො මැති නම්- නූපදීමත් වඩා යහපත් (𑇢𑇳𑇬𑇦)

Chinese (汉语)
人生於世, 應取榮名, 不能爲之者, 不如不生. (二百三十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Sa-sudah datang ka-dunia ini, biar-lah sa-saorang itu memperolehi kemashhoran dan keagongan: kapada mereka yang tidak menchapai kemashhoran, lebeh baik-lah mereka ini tidak di-lahirkan sama sa- kali.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
선택한 분야에 진입해서 명성을 얻어야 하고, 다른 분야에는 진입하지 않아야 한다. (二百三十六)

Russian (Русский)
Коль уж ты явился в этот мир, то живи со славой. Людям. которые не разумеют славы, лучше вообще не родиться

Arabic (العَرَبِيَّة)
يلزم على كل مولود أن يكون نظيرا للصفات الحسنة فان لم يجد سبيلا إلى حصول تلك الصفات فالاحسن أن لا تلده أمه (٢٣٦)


French (Français)
Si l’on nait, il faut naître avec les qualités propres à acquerir la gloire. Si non, il vaut mieux ne pas pas naître.

German (Deutsch)
Wirst du in dieser Weh geboren, sei mis Ruhm geboren - andere sind besser dran: überhaupt nicht geboren zu sein.

Swedish (Svenska)
Om du skall födas <till denna jord> må du födas med ära. Utan ära är det bättre att alls icke födas än att födas. 
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Si (publice) appares, cum laude appare! melius erit, non apparere quam sine laude apparere. (CCXXXVI)

Polish (Polski)
Aby ludzie wzrastali dla dobra i chwały, Bo cóż życie bez chwały jest warte?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22