The Wealth of Children

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.   (௬௰௬ - 66) 

Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham
MakkalMazhalaichchol Kelaa Thavar
— (Transliteration)


kuḻaliṉitu yāḻiṉitu eṉpatam makkaḷ
maḻalaiccol kēḷā tavar.
— (Transliteration)


The flute is sweet', 'The lute is sweet', Say those who never heard their children lisp.

Tamil (தமிழ்)
தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, ‘குழலிசை இனியது’, ‘யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள் (௬௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர். (௬௰௬)
— மு. வரதராசன்


பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். (௬௰௬)
— சாலமன் பாப்பையா


தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள் (௬௰௬)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀵𑀮𑁆𑀇𑀷𑀺𑀢𑀼 𑀬𑀸𑀵𑁆𑀇𑀷𑀺𑀢𑀼 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀫𑁆 𑀫𑀓𑁆𑀓𑀴𑁆
𑀫𑀵𑀮𑁃𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀓𑁂𑀴𑀸 𑀢𑀯𑀭𑁆 (𑁠𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
मुरली-नाद मधुर कहें, सुमधुर वीणा-गान ।
तुतलाना संतान का, जो न सुना निज कान ॥ (६६)


Telugu (తెలుగు)
వారి వారి బిడ్డ గారాబు మాటలు
విన్న వినరు వీణ వేణురవళి . (౬౬)


Malayalam (മലയാളം)
കുഞ്ഞിൻകൊഞ്ചൽ ശ്രവിക്കാത്ത മന്ദഭാഗ്യർ കഥിച്ചിടും; വീണയും കുഴലും കേൾവിക്കേറ്റം സുന്ദരമായിടും (൬൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ತಮ್ಮ ಮಕ್ಕಳ ತೊದಲು ಮಾತನ್ನು ಕೇಳದವರು ಕೊಳಲು ಇನಿದು, ವೀಣೆ ಇನಿದು ಎಂದು ಹೇಳುತ್ತಾರೆ. (೬೬)

Sanskrit (संस्कृतम्)
अस्पष्टमधुरं पुत्रभाषितं श्रृणोति य: ।
स एव कथयेत् रम्यं वीणावेण्वादि वादितम् ॥ (६६)


Sinhala (සිංහල)
නලා වීණා හඩ- ඉතා මිහිරි යි කියති තම දරුවන් බොළඳ- වදන් සවනට නො වැකි දෙගූරු (𑇯𑇦)

Chinese (汉语)
未聞其子女囁嚅之聲者, 始謂絲竹之音最爲悅耳. (六十六)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Bunyi serunai lunak manis dan bunyi gitar mcrdu mengashekkan: bagitu-lah kata mereka yang belurn pernah mendengar suara anak- nya berbebel.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
자녀의 혀 짧은 발음을 듣지 못한 사람만 플루트와 류트의 소리가 매혹적이라고 말한다. (六十六)

Russian (Русский)
Звуки лютни кажутся сладостными лишь тем, кто не наслаждался дивным лепетом своих малышей

Arabic (العَرَبِيَّة)
الطنبورة حلوة والعود أيضا حلو ولكن لثغة الأطفان الصغار أحلى منهما (٦٦)


French (Français)
Ce sont ceux qui n’ont pas entendu le babillage de leurs enfants qui disent: ‘‘la flute est douce ‘‘la lyre, est douce.’’

German (Deutsch)
Wer nie die brabbelnden Worte seiner Kinder gehört hat, sagt „Süß klingt die Flöte, süß klingt die Vina.

Swedish (Svenska)
”Flöjten är vacker, lutan klingar skönt.” Så säger blott den som ej hört egna barns jollrande pladder. 
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
"Dulcis fistula. dulcis cithara" ita dicent, qui filioli sui primamvocem non audiverunt. (LXVI)

Polish (Polski)
Jeśli wolisz dźwięk fletu, tampury czy winy*, Nie zaznałeś dziecięcej pieszczoty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இனிமையானது எது? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

புல்லாங்குழலின் இசை இனிமையாக இருக்கிறது. வீணையின் நாதம் பரவசம் உண்டாக்குகிறது என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அப்படிப்பட்டவர் யார்?

குழந்தை பாக்கியம் இல்லாதவர் தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையின் மழலைச் சொல்லான மென்மையான மொழியைக் கேட்டு, இன்பம் அறியாதவர்களே, அவ்வாறு புல்லாங்குழல் இசையும், வீணையின் நாதமும் இனிமையாக இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

மழலைச் சொற்களைக் காட்டிலும் இனிமை வேறு உண்டோ?


குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22