ஒருவனுக்கு ஒழுக்கமும், பண்பும் உள்ள மனைவி அமைந்தால் அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கற்பு நெறியும், புகழத்தக்க குணமும் கொண்ட மனைவி வாய்க்காதவனின் நிலைமை என்ன?
தன்னை மதிக்காதவர் எதிரில் அவன், வீரதீரமாக, கம்பீரமாக நடந்துபோக முடியாது. அவன் வெட்கத்தால் கூனிக் குறுகிவிடுவான்.
கற்றத்தார், நண்பர்கள் முன்னே, ஆண் சிங்கம் போல் தலைநிமிர்ந்து, அவனால் நடந்து செல்ல முடியாது. ஆகவே, மனைவிக்கு அழகு- படிப்பைக் காட்டிலும் ஒழுக்கமும், இங்கிதமும் மிகவும் முக்கியம். அதுவே போற்றத்தக்கது.