రాజాశ్రయము

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.   (௬௱௯௰௧ - 691)
 

తగిలి తగలకుండ పెగ గాచుకొన్నట్లు
బ్రతుకవలయు నృపుని పాలనున్న. (౬౯౧)

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.   (௬௱௯௰௨ - 692)
 

కోరరాదు రాజు కోరెడి కోర్కెల
నట్టి యాశ్రితునకు నమరు సిరులు. (౬౯౨)

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.   (௬௱௯௰௩ - 693)
 

మెలగవలయు నెంతొ మెలకువగా నుండి
శంకరాగ మాన్ప శక్యపడదు. (౬౯౩)

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.   (௬௱௯௰௪ - 694)
 

చెవిని జెప్పరాదు చేరి నవ్యగరాదు
విడిచి చెప్పునేని వినుట మేలు (౬౯౪)

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.   (௬௱௯௰௫ - 695)
 

మర్మ మడుగరాదు మర్మంబు వినరాదు
వినుమటన్న దానిఁ వినుట లెప్ప. (౬౯౫)

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.   (௬௱௯௰௬ - 696)
 

ఊహ నరసి కాలమూహించి విన్నది
వినయముగను బల్కు వెగటు విడక. (౬౯౬)

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.   (௬௱௯௰௭ - 697)
 

వినగ దగ్గ వాని వినిపించి వినరాని
వడిగెనేని జెప్ప దొడఁగ రాదు. (౬౯౭)

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.   (௬௱௯௰௮ - 698)
 

బాలుఁడనియు తనకు బంధువనియు నెంచ
వలదు రాజ్యపదని గలిగినపుడు. (౬౯౮)

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.   (௬௱௯௰௯ - 699)
 

ఎన్నబడితి మనుచు నేదైన జేయరు
సుస్థిరమతులైన నుజనులెపుడు. (౬౯౯)

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.   (௭௱ - 700)
 

ప్రాతవాళ్ళ మనుచు నీతికి దూరమై
నడచుకొన్న పదవినష్టమగును. (౭౦౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
மன்னர் தம்மைச் சேர்ந்தொழுகும் சேவை - இது
மாநில அமைச்சருக்குத் தேவை - சொல்லின்
அன்னவர் குறிப்பறிந்தே ஆகும் காலமும் தெரிந்தே
ஆற்றும் வினை போற்றும்

மன்னவர் விழைப விழையாமை - பாரில்
மன்னிய ஆக்கம் தரும் மேன்மை - மேலும்
தன்னினம் இளையர் முறை என்னினும் இகழ்ந்திடாமல்
தலைமை ஏத்தும் நிலைமை

ஒட்டுக் கேட்பதாலே வரும் தீது - மனம்
விட்டுச் சொன்னால் கேட்கலாம் அப்போது - தம்மை
ஒப்புக் கொள்ளப் பட்டாலுமே எப்பொழுதும் மாறில்லாத
உண்மை மனத் திண்மை

ஆன்ற பெரியோரகத்து வாசம் - பெற்றே
அரியவை போற்றின் மிகும் நேசம்
சேர்ந்த நகையும் செவிச் சொல்லுமே அவித்தொழுகத்
தேறும் நலம் கோரும்

அகலாமல் அணுகாமல் இருந்தே - மிக்க
ஆவலுடன் தீக்காய்வார் போல் அமைந்தே - என்றும்
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகப் புகலும் நடைபழக
ஏற்கும் குறள் நோக்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22