స్త్రీలోలుఁడు

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.   (௯௱௧ - 901)
 

స్త్రీల ననుసరింపఁ జెడుపోను, కార్యజ్ఞు
లిష్టపడని కార్యమిది యటండ్రు. (౯౦౧)

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.   (௯௱௨ - 902)
 

మగువలందు దగిలి మఱచిన సర్వమ్ము
వచ్చుదాని కన్నఁ వగపు హెచ్చు (౯౦౨)

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.   (௯௱௩ - 903)
 

మగువ కణఁగి యుండు మగవానికే ప్రొద్దు
సుజనులుండు చోట శోభరాదు. (౯౦౩)

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.   (௯௱௪ - 904)
 

మగువ కణఁగ మోక్ష మార్గమ్ము శూన్యమ్ము
పూనుకొన్న పనులు పూర్తిగావు (౯౦౪)

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.   (௯௱௫ - 905)
 

సతికి వెఱచు నతఁడు సతతమ్ము వెరచును
సాయపడుటకైన సజ్జనులకు. (౯౦౫)

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.   (௯௱௬ - 906)
 

అమర పదవులందు నమరినవాడైన
నాతిఉ కణఁగి యున్నఁ ఖ్యాతిరాదు. (౯౦౬)

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.   (௯௱௭ - 907)
 

పొలతి మాటఁ వినెడి పురుషన కన్నను
మానదృష్టి నున్న మగువ మేలు. (౯౦౭)

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.   (௯௱௮ - 908)
 

మిత్రహితము లేదు మిగలదు ధర్మము
లతివ మాట దాట నతని కెందు. (౯౦౮)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.   (௯௱௯ - 909)
 

పొలతి కణగుఁ నతండు పురుషార్థముల మాని
పుణ్యలార్యములను బోనడంచు. (౯౦౯)

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.   (௯௱௰ - 910)
 

దీర్ఘదృష్టియందు స్థిరపడ్డ వారలు
స్త్రీల మోహమందు జిక్కుకొనరు. (౯౧౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வசந்தா  |  Tala: ஆதி
பல்லவி:
இல்லாளை அஞ்சி ஏனோ வாழ்கின்றாய் நீ
இப்படியுமா உலகில் ஏழையாகித் தாழ நின்றாய்

அநுபல்லவி:
நல்லார்க்கு நல்ல செயல் செய்திடவும் அஞ்சுகின்றாய்
நாணிக் கோணி மனையாளை நாளும் நாளும் கெஞ்சு கின்றாய்

சரணம்:
பட்டம் பெற்றாலும் என்ன பதவியில் உயர்ந்தும் என்ன
பாரினில் தேவரைப் போல் பாங்குடன் வாழ்ந்தும் என்ன
நட்டார் குறை முடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகுபவர் பேரே கெடும் இதனால்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்தெனும் குறள் சொல்லிதை
எண் சேர்ந்த நெஞ்சத் திடனுடையாரைச் சேர்ந்திடுக
பெண்சேர்ந்த பேதைமையை இன்றே நீ கைவிடுக
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22