Raga: கானடா | Tala: ரூபகம் பல்லவி:இரு நோக்கிவள் உண் கண்ணுள்ளது
ஈடில்லாத பெருமை கொள்வது
அநுபல்லவி:ஒரு நோக்கு நோய் நோக்காய் உடலிற் பாய்ந்திடும்
ஒன்றந்த நோய் தீர்க்கும் மருந்தாய் வந்து காத்திடும்
சரணம்:மான் பிணைபோல் மருண்டு மருண்டு நோக்கும் பண்பினள்
மாசில்லாத காதற் பயிரை வளர்க்கும் அன்பினள்
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும் தாமரை முகத்தாள்
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது இந்த ஞாலத்தில்
கண்ணோடு கண்ணிணை நோக்க ஒப்பின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இலை எனவே இசைத்திடும் குறள்சொல்