కృతజ్ఞత

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.   (௱௧ - 101)
 

ఎట్టి ప్రతిపలమ్ము నెదురుజాడకఁ జేయు
మేలె గొప్ప మన్ను మిన్ను కన్న. (౧౦౧)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.   (௱௨ - 102)
 

కాలమెఱిఁగి జేయ గలిగిన మేలది
చిన్నదైనఁ జగతికన్న మిన్న. (౧౦౨)

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.   (௱௩ - 103)
 

అశలేక మేలుజేసిన గొప్పకు
సాగరంబు గూడ సమము గాదు. (౧౦౩)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.   (௱௪ - 104)
 

కొంచమైన మేలు కొండగా భావింత్రు
దాని మహమ దెలియ దగినవారు. (౧౦౪)

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.   (௱௫ - 105)
 

కొలతఁబిట్టి మేలు గొలచుట సరిగాదు
గుణము నందె దాని గొప్ప కలదు. (౧౦౫)

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.   (௱௬ - 106)
 

ఇడుములందు సాయపడినట్టి మైత్రిని
పీడఁరాదు మేలుఁ జాడవలయు. (౧౦౬)

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.   (௱௭ - 107)
 

అదుకొన్న స్నేహ మాపదఁ దొలిగింప
జన్మజన్మములకు జ్ఞప్తిగలుగు. (౧౦౭)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.   (௱௮ - 108)
 

మేలు మఱువరాదు మేనుండు నందాక
కీడు మఱువ పాడినాడు నాడె. (౧౦౮)

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.   (௱௯ - 109)
 

తలకు మించి కీడుఁదలపెట్టు వాని దౌ
మేలు కొంత దలుపఁ జాలి కలుగు. (౧౦౯)

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.   (௱௰ - 110)
 

దేనినైన మఱువఁ దెరవుండు బ్రతుకంగ
మేలు మఱచి బ్రతుక వీలుగాదు. (౧౧౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சண்முகப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
செய்ந்நன்றி அறிதலே சிறப்பல்லவோ
தேடிவந்து நம்மைக்
கூடி நின்றே உதவும்

அநுபல்லவி:
எய்தும் துன்பம் கண்டு இரக்கமுடன் வந்து
எண்ணிய உதவியைத் திண்ணமதாய்ப் பிறர்
விண்ணினும் மண்ணினும் மேம்படவே தரும்

சரணம்:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்றெனக் கொள்ளுவோம்
கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த
குணமிகு நன்றி ஒன்றாயினும் கருதிட
மணமிகும் வாழ்க்கையில் குறள்மொழி மருவிடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22