Raga: நாட்டக் குறிஞ்சி | Tala: ரூபகம் பல்லவி:மாதவமே மனிதனை உயர்த்தும்
மாநில மீதருள் வாழ்வினிலே பெறும்
அநுபல்லவி:தீதவமென்பதில் திரிந்து கெடாமலே
திருவருளே பெற
ஒருமனதாய்க் கொள்ளும்
சரணம்:தானமதில் உயர்வான தவமிது
தன் முயற்சிகொண்டே நாளும் தழைப்பது
ஞான ஒளிதர ஞாலத்துதித்தது
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தருவது
"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்" எனவே குறள்
பொன்னென வாழ்க்கையின் போதனையே தரும்
பூமியில் வேண்டிய யாவையும் தான் பெறும்