ముక్తులు

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.   (௨௰௧ - 21)
 

తనదు ధర్మపథముఁ దప్పని ముక్తులఁ
బ్రస్తుతించు నెల్ల పుస్తకములు (౨౧)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   (௨௰௨ - 22)
 

యతుల మహిమ లెన్న మృతులైన వారల
నెంచి చెప్ప సాహసించినట్లు (౨౨)

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.   (௨௰௩ - 23)
 

కల్ల నిజములం గనుఁగొని సన్యసించిన
మునుల కీర్తి లోకమునకు వెలుఁగు (౨౩)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.   (௨௰௪ - 24)
 

చిత్త మంకుశముగఁ జేసి యైదింటిని
నణఁచు నతఁడు మోక్షమునకు విత్తు (౨౪)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.   (௨௰௫ - 25)
 

నిగ్రహిఁచుకొన్న నిష్ఠ గరిష్ఠుని
కమర ప్రభువె సాక్షి యంబరమున (౨౫)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.   (௨௰௬ - 26)
 

చేయ దగ్గ పనులె చేతురు పెద్దలు
చిన్నలట్టిపనులు చేయఁలేరు (౨౬)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.   (௨௰௭ - 27)
 

వినుట కనుట వంటి వివరమ్ము లైదింటి
నెఱుఁగు జ్ఞాని లోక మెఱిగి యుండు (౨౭)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.   (௨௰௮ - 28)
 

ఋషులు జెప్పినట్టి విషయమ్ములేనాఁడు
మంత్రములుగ నేడు మహిమఁగాంచు (౨౮)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.   (௨௰௯ - 29)
 

గుణము లనెడు కొండ గూర్చున్న వారికి
విలువ దాగ్రహంబు నిముసమైన (౨౯)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.   (௩௰ - 30)
 

కరుణ జూపువారె కష్టపెట్టకొకరి
బ్రాహ్మణులుగ జెప్పఁబడెడువారు (౩౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பௌளி  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை
உலகமெல்லாம் மதிக்கும்
உண்மை அறிவுடைமை

அநுபல்லவி:
அழுக்கில்லாத மனத்தால்
அறிவெனும் அங்குசத்தால்
ஐம்பொறி யானைகளை
அடக்கிக் காக்கும் திறத்தால்

சரணம்:
புலன்களின் வகை யெல்லாம் அறிந்தவ ரிடமே
பூவுலகே பொருந்தி அடங்கி நின்றி டுமே
நலந்தரும் நிறைமொழி மாந்தர் தம் பெருமை
நிலம்பெறும் மறைமொழி காட்டிடும் இது மெய்
இருமை வகை தெரிந்தே ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுல கெனத் தேர்ந்தார்
அருமை திருக்குறள்போல் அனைத்துயிர் வாழ
அன்புப் பணிபுரிவார் அருள் நலம் சூழ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22