கிளிக்கண்ணி:பண்பின் வழி நடக்கப் பகைவரின் செருக்கடக்க
நண்பர்கள் சூழ்ந்து நிற்க - கிளியே
நாடும் நம் குறளாட்சியே
வில்லே ருழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை - என்றே
சொல்லும் நல் லறிவுரையே
இளைதாகவே முள்மரம் இருந்தாலும் கொல்லவேண்டும்
விளையாட்டுக்கும் பகையை - கிளியே
விரும்புதல் கூடாதடி
இணையும் துணையோ இல்லை என்றாலும் பகை இரண்டால்
துணையதில் ஒன்றைக் கொண்டால் - கிளியே
தோல்வியே இல்லை கண்டாய்
பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் பெரும்
தகைமைக் கண் தங்கிற்றுலகு - கிளியே
தழைக்கவே பணி புரிவோம்