Raga: சக்கரவாகம் | Tala: ஆதி பல்லவி:ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை - இது
ஒழுக்கத்திலே உயர்ந்த குடிமை
ஒப்புரவாண்மையுடன் செப்பமும் நாணும் கொண்ட
அநுபல்லவி:ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார் என்று செல்லும் பொருள் நன்று காணும் குறள்
சரணம்:மேலும் மேலும் துன்பம் வந்தாலும் வீழ்ச்சில்லார்
விண்ணில் உலாவும் மதி தன்னிலும் மேன்மையுள்ளார்
பாலும் கரும்பும் பொன்னும் சந்தனமும் போல்வார்
பண்பினோடு பழம் பெருமை வாய்ந்த குடி
வண்மை ஏழ்மையிலும் நீங்கிடாத படி
தொகையாகவே அடுக்கி ஒரு கோடி தந்தாலும்
தோன்றும் தன் குடிக்கென்றும் குன்றுவ செய்தல்இலர்
நகை ஈகை இன்சொல் இகழாமையே போற்றுவார்
நலம் விளங்கிடவும் குலம் விளங்கிடவும்
நாணயத்தினுடன் நல்லடக்கம் மிகும்