లుబ్ధత

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்   (௲௧ - 1001)
 

ధనము దొంతులందుఁ దగబేర్చి చచ్చును
నిర్దయుండు తినక వ్యర్థముగను. (౧౦౦౧)

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௲௨ - 1002)
 

ధనము మూలమందు దానధర్మములేక
నీచజన్మ మత్తు నిర్దయుండు (౧౦౦౨)

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.   (௲௩ - 1003)
 

కూడబెట్టుకొనుటె గుణమని సత్కీర్తి
బడయలేని జనులు భారమవని. (౧౦౦౩)

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.   (௲௪ - 1004)
 

మిగతఁగాగ జెప్ప దగినది యున్నదే
యిచ్చి మెప్పు వడక జచ్చునతఁడు. (౧౦౦౪)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.   (௲௫ - 1005)
 

తాను దినక నొరులకైనను బెట్టక
కోటె కున్ననేమి గుణము దాన. (౧౦౦౫)

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.   (௲௬ - 1006)
 

ముగ్ధ పెండ్లిగాక ముదిమిపాలైనటు
లాదుకొనని ధనము బాధలందు. (౧౦౦౬)

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.   (௲௭ - 1007)
 

ఇచ్చి యనుభవింప నిచ్చగొంపని వాఁడు
సిరికిఁ బట్టుకొన్న చీడవురుగు. (౧౦౦౭)

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.   (௲௮ - 1008)
 

నచ్చనట్టి ధనము నగరి మధ్యము నందు
విషఫలమ్ము లిచ్చు వృక్షమట్లు. (౧౦౦౮)

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.   (௲௯ - 1009)
 

ప్రీతిఁదొఱిగి నేది బెట్టక నవినీతి
జేర్చుకొన్న ధనము జేరునొరుల. (౧౦౦౯)

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.   (௲௰ - 1010)
 

పేరువడిన వారు పేదవడగఁ జూడ
కురిసి కురిసి మబ్బు తేరిపియగుట. (౧౦౧౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அட்டாணா  |  Tala: ஆதி
பல்லவி:
நன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்
நயன் காணுமோ ஒரு
பயன் காணுமோ அறிவீர்

அநுபல்லவி:
குன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்
கொண்டவர் நுகரா விடில்
கண்ட பயன் ஏது சொல்வீர்

சரணம்:
எச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு
ஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்

வாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்
வடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22