Raga: நாட்டை | Tala: ஆதி பல்லவி:உடைக்க முடியாத அரண் இதுதான் - மிக்க
உயரமும் அகலமும் உறுதியும் உள்ளது காண்
அநுபல்லவி:படை எடுத்துப் போர் செய்யச்
செல்லுவோர் தமக்கும்
அடைக்கலமாய் வந்தோர்க்கும்
ஆதரவாகி நிற்கும்
சரணம்:முற்றுகையிட்டுப் பலநாள் முயன்றாலும்
முறைகெட்டு வஞ்சனையால் கொள்ள நின்றாலும்
பற்றுக்கொண்டே தன்னாட்டின் படைபலம் காக்கும்
பகைவரின் ஊக்கமெல்லாம் அழிய முன் சாய்க்கும்
பணிசெய்யவே எல்லாப் பொருளையும் கொண்டது
பக்கத் துணையாய் நல்ல வீரரும் திரண்டது
"மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையதரண்" என்றிடும் திருக்குறள்