Raga: சாமா | Tala: ரூபகம் பல்லவி:மதலையின் மொழிக்கிணையாமோ
மங்கல மாட்சியிலே
நன் கலமாகப் பெறும்
அநுபல்லவி:குதலை மொழியது குழலினும் இனியது
கொண்டிடும் மேன்மையைத்
தண்டமிழ்க் குறள் சொல்லும்
சரணம்:இல்லற வாழ்க்கையின் இன்பக் கனியமுதம்
எவரும் மதிக்கவரும் ஈடில்லா மக்கட் செல்வம்
நல்லறம் கூறவும் நடைமுறை தேறவும்
நாட்டின் நலம் கருதி வீட்டினிலே தவழும்
ஈன்ற பொழுதைவிட இனிது மகிழ அன்னை
இவன் தந்தை என்னோற்றானோ என்று புகழத்தன்னை
ஆன்றோரை அணுகி அறிவதெல்லாம் அறிந்து
சான்றோன் இவன் எனத் தகுதிபெற வளரும்