Raga: கல்யாணி | Tala: ஆதி பல்லவி:நீதியின் திருமுகமே - செங்கோன்மை
நிலைபெற விளங்கிடுமே
நினைவுறும் மாந்தர்கள்
அனைவரும் சமமெனும்
அநுபல்லவி:ஆதியாய் அரசாளும் உலகினிலே
ஆதரவாகவே
அறவோர்கள் சூழவே
சரணம்:விளைவும் மழையும் ஒன்றாய்க்கூடும் தன்னாலே
வேலினும் கொலே வெற்றி அளிக்கும் முன்னாலே
வளையாமலே நாளும் வளரும் பண்பாலே
மன்னுயிர் யாவையும் தன்னுயிர் என்றிடும்
மன்னவன் முன்னவனாக வணங்கிடும்
குடி புறங் காத்தோம்பி குற்றமே கடிதல்
வடு வன்று வேந்தன் தொழில் எனும் குறளறிதல்
கொடியோர் தமை ஒறுத்தே இறை முறை புரிதல்
கொற்றம் விளங்கிட நற்றுணை நின்றிடும்
பெற்ற தன்னாட்சியைப் பேருலகேத்திடும்